DMV Rhythms இசைக்குழு பால புரஸ்கார் விருது சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
|
|
கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது |
|
- |அக்டோபர் 2021| |
|
|
|
|
விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும், விருதுடன் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகின்றன. 'சக்தி மசாலா' நிறுவனர் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் விருதுக்கான நிதியை வழங்கி வருகின்றனர்
கி.ரா. விருது இவ்வாண்டு எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விருதைப் பெற்றவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். கி.ரா.வின் மறைவுக்குப் பின் இவ்விருதை இவ்வாண்டு கோணங்கி பெறுகிறார்.
நவம்பர் 1, 1956 அன்று கோவில்பட்டியில் பிறந்தவர் கோணங்கி. இயற்பெயர் இளங்கோ. சுதந்திரப் போராட்ட தியாகி மதுரகவி பாஸ்கரதாஸின் மகள்வழிப் பேரன். கல்குதிரை சிற்றிதழின் ஆசிரியர். பாழி, பிதிரா, த, நீர்வளரி போன்ற குறிப்பிடத்தகுந்த நாவல்களை எழுதியிருக்கிறார் (கோணங்கியைப் பற்றி மேலும் வாசிக்க.) |
|
ஞானபீட விருது, சரஸ்வதி சம்மான் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்சத் தொகை கொண்ட விருது இதுதான். |
|
|
More
DMV Rhythms இசைக்குழு பால புரஸ்கார் விருது சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
|
|
|
|
|
|
|