அரிசியில்லா (டயபடீஸ்) தோசை
|
|
|
|
தேவையான பொருட்கள் கீன்வா - 1 கிண்ணம் ஓட்ஸ் - 1/2 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் துவரம்பருப்பு - 1/2 கிண்ணம் பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு தேங்காய்த் துருவல் - சிறிதளவு வெங்காயம் - சிறிதளவு எண்ணெய் - அடை வார்க்க
செய்முறை கீன்வாவுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து ஊறவைக்கவும். மூன்று மணி நேரமாவது ஊறியதும் உப்பு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு அடை செய்யலாம். பொன்னிறமாக எடுக்கவும். தேங்காய்த் துருவல் அல்லது வெங்காயம் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, புதினா சட்னியுடன் சாப்பிடச் சுவையோ சுவை. |
|
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
அரிசியில்லா (டயபடீஸ்) தோசை
|
|
|
|
|
|
|