Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அமிருதவர்ஷிணியின் கீபோர்டு இசை
ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம்: ஹபீப் கான் - ரவிகிரண் இணைந்திசை
சுனாமி நிவாரண நிதி: பண்டிட் விஸ்வமோகன் பட் வீணையிசை
- சூப்பர் சுதாகர்|மே 2005|
Share:
Click Here Enlargeமே 8, 2005 ஞாயிறு அன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை, 'பத்மஸ்ரீ' பண்டிட் விஸ்வமோகன் பட் அவர்களின் வீணைக் கச்சேரி ஒன்றை மாதா அமிர்தானந்தமயி தலைமை மையம் (M.A. Center) ஏற்பாடு செய்துள்ளது. கலிபோர்னியா வளைகுடாப் பகுதியின் சான் ரமோனில் உள்ள இந்த மையம், அம்மாவின் சுனாமி நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது.

விஸ்வமோகன் பட் அவர்கள் பண்டிட் ரவி சங்கரின் சிஷ்யர். இவர் 1994-ம் ஆண்டு 'கிராம்மி' (Grammy) விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை நிகழ்ச்சியில் வித்வான் விஸ்வமோகன் பட் தனது சொந்தக் கண்டுபிடிப்பான மோகன வீணையை (விசித்திர வீணையும், ஹாவாயியன் கிதாரும் கலந்த இசைக் கருவி) வாசிக்க இருக்கிறார்.

இவரோடு இணைந்து சுபென் சாட்டர்ஜி தபலா வாசிக்க இருக்கிறார். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

அம்மாவின் சுனாமி நிவாரண பணிகள் பற்றி மேலும் அறிய: www.amritapuri.org/tsunami
மேலும் விபரங்களுக்கு: www.wavesofcompassion.com/vmb-concert.html
நிகழ்ச்சி:
பத்மஸ்ரீ விஸ்வமோகன் பட் வீணைக் கச்சேரி
நாள்: ஞாயிறு, மே 8, 2005
நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணி வரை
நடக்கும் இடம்: Anthony Soto Theater, C.E.T, சான் ஹொசே
நுழைவுச்சீட்டு: $25 (பெரியவர்), $10 (6-16 வயதுச் சிறியவர்),
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்
நன்கொடை மற்றும் நுழைவுச்சீட்டுக்கு: 408.739.6391

சூப்பர் சுதாகர்
More

அமிருதவர்ஷிணியின் கீபோர்டு இசை
ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம்: ஹபீப் கான் - ரவிகிரண் இணைந்திசை
Share: 




© Copyright 2020 Tamilonline