மே 8, 2005 ஞாயிறு அன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை, 'பத்மஸ்ரீ' பண்டிட் விஸ்வமோகன் பட் அவர்களின் வீணைக் கச்சேரி ஒன்றை மாதா அமிர்தானந்தமயி தலைமை மையம் (M.A. Center) ஏற்பாடு செய்துள்ளது. கலிபோர்னியா வளைகுடாப் பகுதியின் சான் ரமோனில் உள்ள இந்த மையம், அம்மாவின் சுனாமி நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது.
விஸ்வமோகன் பட் அவர்கள் பண்டிட் ரவி சங்கரின் சிஷ்யர். இவர் 1994-ம் ஆண்டு 'கிராம்மி' (Grammy) விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை நிகழ்ச்சியில் வித்வான் விஸ்வமோகன் பட் தனது சொந்தக் கண்டுபிடிப்பான மோகன வீணையை (விசித்திர வீணையும், ஹாவாயியன் கிதாரும் கலந்த இசைக் கருவி) வாசிக்க இருக்கிறார்.
இவரோடு இணைந்து சுபென் சாட்டர்ஜி தபலா வாசிக்க இருக்கிறார். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
அம்மாவின் சுனாமி நிவாரண பணிகள் பற்றி மேலும் அறிய: www.amritapuri.org/tsunami மேலும் விபரங்களுக்கு: www.wavesofcompassion.com/vmb-concert.html
நிகழ்ச்சி: பத்மஸ்ரீ விஸ்வமோகன் பட் வீணைக் கச்சேரி நாள்: ஞாயிறு, மே 8, 2005 நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்கும் இடம்: Anthony Soto Theater, C.E.T, சான் ஹொசே நுழைவுச்சீட்டு: $25 (பெரியவர்), $10 (6-16 வயதுச் சிறியவர்), 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் நன்கொடை மற்றும் நுழைவுச்சீட்டுக்கு: 408.739.6391
சூப்பர் சுதாகர் |