Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
என்றாவது ஒருநாள்
எண்ணித் துணிக
எனிமி
அனுக்கிரகன்
வேலன்
வீரப்பனின் கஜானா
பாயும் ஒளி நீ எனக்கு
ஹாஸ்டல்
- அரவிந்த்|மே 2021|
Share:
அசோக் செல்வன் கதநாயகன். பிரியா பவானி சங்கர் கதாநாயகி. உடன் நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, சதீஷ், பாவா லட்சுமணன், கலைராணி, யோகி, கிரிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெற்றி பெற்ற 'அடி கப்யாரே கூடாமணி' படத்தின் தமிழ் ரீமேக் இப்படம். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் போபோ சசி. படம்பற்றி இயக்குநர், "அசோக் செல்வனுடன் ஏற்படும் சின்ன தகராறில், அவர் பயிலும் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து அவரை மிரட்டுகிறார் பிரியா பவானி சங்கர். இதை அவர் விளையாட்டாகச் செய்யப்போய் எதிர்பாராதவிதமாக அங்கேயே மாட்டிக்கொள்கிறார். ஆண்கள் ஹாஸ்டலில் ஒரு பெண் இருப்பதைப் பார்த்தால், அந்த ஹாஸ்டலின் வார்டன் நாசர், சம்பந்தப்பட்ட மாணவனை கல்லூரியைவிட்டே அனுப்பிவிடுவார். அவரது கண்ணிலும், அவருடைய உதவியாளர் முனீஸ்காந்த் கண்ணிலும் படாமல், பிரியா பவானி சங்கரை வெளியே அனுப்ப அசோக் செல்வன் என்ன பாடு படுகிறார் என்பதுதான் படம்" என்கிறார். சுவையான கற்பனை!
அரவிந்த்
More

என்றாவது ஒருநாள்
எண்ணித் துணிக
எனிமி
அனுக்கிரகன்
வேலன்
வீரப்பனின் கஜானா
பாயும் ஒளி நீ எனக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline