Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
டூசான் தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா
- பாலு நடராஜன்|மே 2021|
Share:
ஏப்ரல் 17, 2021 அன்று டூசான் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை இணையம் வழியே கொண்டாடியது. அரிசோனா மாநிலத்தின் தனித்துவமான சோனோரன் பாலைவனப் பகுதியில் டூசான் நகரம் இரண்டாவது பெரிய நகரமாகும். டூசானில் சுமார் 50 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன, தமிழ்ச் சங்கம் தவிர, ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடமும் டூசான் நகரில் சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.



அண்மையில் காலமான நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சங்கத் தலைவர் திரு பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினார். கே.பி.ஒய். புகஷ் நவீன் முரளிதர் சென்னையிலிருந்து தனது நகைச்சுவை/மிமிக்ரி நிகழ்ச்சியால் மகிழ்வித்தார். ஆன்லைன் விளையாட்டுகள், அமெரிக்காவின் 'அல்டிமேட் பாடும் நட்சத்திரம்' திருமதி துர்கா லட்சுமியின் பாடல் மற்றும் அமெரிக்காவில் வளர்ந்த இளைஞர் உறுப்பினர்கள் நடத்திய 'அமெரிக்காவில் தமிழ்ப் பண்டிகைகள் கொண்டாட்டம்' குழு விவாதம் ஆகியவை இடம்பெற்றன. தமிழ்ச்சங்கம் உறுப்பினர் நலனுக்காகச் சமீபத்தில் உருவாக்கிய வலைத்தளத்தையும் காட்சிப்படுத்தியது.
பாலு நடராஜன்,
டூசான், அரிசோனா
Share: 




© Copyright 2020 Tamilonline