தடபுடலான சில வடகங்கள் ஜவ்வரிசி வடகம் அரிசி வடகம் கூழ் வடகம் வாசகர் கைவண்ணம் : தஞ்சாவூர் பருப்பு உசிலி
|
|
|
தேவையான பொருட்கள்
காராமணி - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/4 கிண்ணம் கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகாய் வற்றல் - 6 பெருங்காயம் - சிறிதளவு |
|
செய்முறை
பருப்பு வகைகளை முதல்நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றைச் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
பிளாஸ்டிக் பேப்பரை வெயில்படும் இடத்தில் போட்டு, மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதில் வைக்கவும்.
2, 3 நாட்கள் நன்றாகக் காயவைத்து டப்பாவில் பத்திரப்படுத்துங்கள்.
குழம்பு, கூட்டு இவற்றில் வறுத்துப் போடலாம்.
வெங்காயம், கறிவேப்பிலை இவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டும் செய்யலாம். ஆனால் அதிக நாட்களுக்கு வைத்துக் கொள்ள முடியாது. சீக்கிரம் கெட்டுவிடும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
தடபுடலான சில வடகங்கள் ஜவ்வரிசி வடகம் அரிசி வடகம் கூழ் வடகம் வாசகர் கைவண்ணம் : தஞ்சாவூர் பருப்பு உசிலி
|
|
|
|
|
|
|