|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|பிப்ரவரி 2021| |
|
|
|
1. வரிசையில் அடுத்து வரக்கூடிய எண் எது, ஏன்? 1, 1, 4, 3, 27, 5, ...
2. நான்கு குழந்தைகளது வயதின் பெருக்குத் தொகை 48. அவர்களில் இருவர் இரட்டைப் பிறவிகள். குழந்தைகளில் மூவர் மட்டுமே பள்ளி செல்லும் பருவத்தினர் என்றால், நான்கு பேரின் வயதுகள் என்னவாக இருக்கும்?
3. ராகவனுடைய வயது எத்தனை ஆண்டுகளோ அத்தனை மாதங்கள் பாபுவின் வயது. பாபுவின் வயது எத்தனை நாட்களோ அத்தனை வாரங்கள் அவனுடைய தந்தை சிவாவின் வயது. இவர்களது மூவரது வயதுகளையும் கூட்டினால் மொத்தம் 120 ஆண்டுகள் வருகிறது என்றால், இவர்கள் வயதுகள் என்ன?
4. A, B, C, D என்ற நான்கு எண்களின் கூட்டுத்தொகை 10000. அவற்றில் முதலாம் எண்ணை 19ஆல் பெருக்கினாலும், இரண்டாம் எண்ணை 19ஆல் வகுத்தாலும், மூன்றாம் எண்ணுடன் 19ஐக் கூட்டினாலும், நான்காம் எண்ணில் இருந்து 19ஐக் கழித்தாலும் 475 விடையாக வருகிறது. அந்த எண்கள் எவை?
5. A என்பவர் Bயின் மகன். B,C இருவரும் சகோதரர்கள். Cயின் தந்தை D. Dயின் மகள் E. Eயின் மகன் x. என்றால் xக்கு A என்ன உறவு?
அரவிந்த் |
|
விடைகள் 1. வரிசை இரண்டு எண்தொடர்களின் வரிசைகளாக அமைந்துள்ளது. 1^1, 2^2, 3^3 என்று ஒரு வரிசையும், 1, 3, 5 என ஒற்றைப்படை எண்களின் ஏறுவரிசையாக மற்றொரு வரிசையும் உள்ளது. அதன்படி அடுத்து வரவேண்டியது 44 = 4 x 4 x 4 x 4 = 256.
2. நான்கு குழந்தைகளின் வயதின் பெருக்குத்தொகை 48; அவர்களில் இருவர் இரட்டை பிறவிகள்; மூவர் மட்டுமே பள்ளிப்பருவத்தினர் எனில் அவர்களின் வயது கீழ்க்கண்டவாறு மட்டுமே இருக்கும். 1 x 3 x 4 x 4 = 48;
3. பாபுவின் வயது = x என்க சிவாவின் வயது = 7x ராகவனின் வயது = 12x x + 7x + 12x = 120 20x = 120 x = 6
ஆண்டுக்கு மாதங்கள் = 12; வாரங்கள் 52; நாட்கள் = 7 ஆக, பாபுவின் வயது = 6 சிவாவின் வயது = 42 (7x6) ராகவனின் வயது = 72 (12x6) 6 + 42 + 72 = 120
ராகவனின் வயது = 72 ஆண்டுகள் = பாபுவின் வயது மாதங்கள் = (6x12=72) சிவாவின் வயது வாரங்கள் = 42 x 52 = 2184 = பாபுவின் வயது நாட்கள் = 6x52x7 = 2184
4. A*19 = 475 B/19 = 475 C+19 = 475 D-19 = 475 A*19 = 475 A = 475/19 = 25 B/19 = 475 B = 475*19 = 9025 C+19 = 475 C = 475-19 = 456 D-19 = 475 D = 475 + 19 = 494
ஆகவே, அந்த எண்கள் = 25, 9025, 456, 494 25 + 9025 + 456 + 494 = 10000.
5. D என்பவர் B, C, E என்ற மூவருக்குமே தந்தை. B, C இருவரும் ஆண்கள், சகோதரர்கள். E அவர்களின் சகோதரி. எனவே Bயின் மகனான Aவுக்கு E அத்தை ஆகிறார். ஆக Eயின் மகனான Xக்கு A மாமன்மகன் ஆகிறார். |
|
|
|
|
|
|
|