கணிதப் புதிர்கள்
1. வரிசையில் அடுத்து வரக்கூடிய எண் எது, ஏன்? 1, 1, 4, 3, 27, 5, ...

2. நான்கு குழந்தைகளது வயதின் பெருக்குத் தொகை 48. அவர்களில் இருவர் இரட்டைப் பிறவிகள். குழந்தைகளில் மூவர் மட்டுமே பள்ளி செல்லும் பருவத்தினர் என்றால், நான்கு பேரின் வயதுகள் என்னவாக இருக்கும்?

3. ராகவனுடைய வயது எத்தனை ஆண்டுகளோ அத்தனை மாதங்கள் பாபுவின் வயது. பாபுவின் வயது எத்தனை நாட்களோ அத்தனை வாரங்கள் அவனுடைய தந்தை சிவாவின் வயது. இவர்களது மூவரது வயதுகளையும் கூட்டினால் மொத்தம் 120 ஆண்டுகள் வருகிறது என்றால், இவர்கள் வயதுகள் என்ன?

4. A, B, C, D என்ற நான்கு எண்களின் கூட்டுத்தொகை 10000. அவற்றில் முதலாம் எண்ணை 19ஆல் பெருக்கினாலும், இரண்டாம் எண்ணை 19ஆல் வகுத்தாலும், மூன்றாம் எண்ணுடன் 19ஐக் கூட்டினாலும், நான்காம் எண்ணில் இருந்து 19ஐக் கழித்தாலும் 475 விடையாக வருகிறது. அந்த எண்கள் எவை?

5. A என்பவர் Bயின் மகன். B,C இருவரும் சகோதரர்கள். Cயின் தந்தை D. Dயின் மகள் E. Eயின் மகன் x. என்றால் xக்கு A என்ன உறவு?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com