|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|ஆகஸ்டு 2019| |
|
|
|
1. வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்? 3=18, 4=32, 5=50, 6=72, 7=98... 10 = ?
2. எட்டு எட்டுக்களைப் பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ விடை 1000 வரச் செய்ய இயலுமா?
3. கீழ்க்கண்ட வரிசையில் பொருந்தாத எண் எது, ஏன்? 21, 42, 63, 77, 105, 119,142, 168.
4. அது ஓர் ஐந்திலக்க எண். அந்த எண்ணுக்கு முன்பாக 1-ஐச் சேர்த்தால் அது, அதே எண்ணுக்குப் பின்னால் 1-ஐச் சேர்த்தால் என்ன எண் வருமோ அதைப்போல் மூன்றிலொரு பங்குதான். அந்த எண் எது?
அரவிந்த் |
|
விடைகள் 1. 3*6=18, 4*8=32, 5*10=50, 6*12 = 72, 7*14 = 98. ஆக வரிசையில் அடுத்து வர வேண்டிய எண்கள் = 8*16=128, 9*18=162, 10*20=200 ஆக 10=200.
2. இயலும். 888+88+8+8+8 =1,000.
3. 142. பிற எண்கள் அனைத்தும் ஏழால் வகுபடும்.
4. ஐந்திலக்க எண்ணை abcde என்க. அதற்கு முன்பாக எண் 1ஐச் சேர்த்தால் 1abcde. 1abcde x 3 = abcde1 p = abcde என்க (100000 + p) x 3 = (p x 10) + 1 300000 + 3p = 10p + 1 7p = 299999 p = 299999 ÷ 7 = 42857 42857க்கு முன்னால் எண் 1ஐச் சேர்க்க = 142857. இதன் மூன்று மடங்கு = 428571 |
|
|
|
|
|
|
|