காதலின் பொன் வீதியில் போடா, ஆண்டவனே என் பக்கம் சிவலிங்கா கவலை வேண்டாம் மன்னர் வகையறா கட்டப்பாவ காணோம் வதனமோ சந்திர பிம்பமோ
|
|
கில்லி பம்பரம் கோலி |
|
- அரவிந்த்|ஆகஸ்டு 2016| |
|
|
|
இப்படி ஒரு புதிய படம் ஒன்று உருவாகிறது. தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ் குமார், தீப்தி ஷெட்டி எனப் பல புதுமுகங்கள் இதில் அறிமுகம். முக்கிய வேடங்களில் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை சினேகன், டி. மனோஹரன் ஆகியோர் எழுத Y.R. பிரசாத் இசையமைக்கிறார். எழுதி இயக்குகிறவர் டி.மனோஹரன். தயாரிப்பாளரும் இவரே. "வெளிநாட்டில் வேலை செய்யும் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து நட்பாகிறார்கள். அவர்கள் பழகி வரும்போது அந்த ஊரில் ஒரு வில்லனோடு ஏற்படும் பிரச்னையால் அந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. வெளியேறாமலே அந்த வில்லனை அழிக்கக் கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம்தான் இந்த 'கில்லி, பம்பரம், கோலி.' இதில் காதல், டூயட் எதுவும் இல்லாது நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது" என்கிறார் இயக்குனர். முழுக்க மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. |
|
அரவிந்த் |
|
|
More
காதலின் பொன் வீதியில் போடா, ஆண்டவனே என் பக்கம் சிவலிங்கா கவலை வேண்டாம் மன்னர் வகையறா கட்டப்பாவ காணோம் வதனமோ சந்திர பிம்பமோ
|
|
|
|
|
|
|