சர்க்கரைக்கு வெந்தயம்!
|
|
|
|
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/2 கிண்ணம் கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம் துவரம்பருப்பு - 1/4 கிண்ணம் மிளகாய்வற்றல் - 4 பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள்தூள் - சிறிதளவு கடுகு - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு
செய்முறை வெந்தயத்தை அளவாகத் தண்ணீர் விட்டு உப்புச் சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஊறவைத்து எடுத்து உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்துக் கொஞ்சம் கரகரப்பாக மிக்சியில் அரைக்கவும். மஞ்சள்தூள் சேர்த்து இட்லித்தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பருப்பு உதிர்த்ததைப் போட்டு வதக்கி, பிறகு வெந்தயம் சேர்த்து நீர் வற்றும்வரை வதக்கவும். உதிர் உதிராக வந்தவுடன் இறக்கிப் பரிமாறலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இல்லாதவர்களும் வெந்தயக்கறி, தேங்காய் சேர்த்துச் செய்யலாம். துளி வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துச் செய்யலாம். கசப்புத் தெரியாமல் இருக்கும். |
|
தங்கம் ராமஸ்வாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
சர்க்கரைக்கு வெந்தயம்!
|
|
|
|
|
|
|