|
|
1) 1, 8, 81, 1024, ..... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
2) A, B, C ஆகிய மூவரும் வியாபாரிகள். A, B இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்ற அன்றைக்கு 700 டாலருக்கு விற்பனை ஆனது. B, C இருவரும் சேர்ந்து சென்றால் 800 டாலருக்கு விற்பனை ஆனது. A, C இருவரும் சேர்ந்து சென்றால் அன்று 900 டாலருக்கு விற்பனை ஆனது. அப்படியானால் தனித்தனியாக ஒவ்வொருவரும் செய்த விற்பனைத் தொகை எவ்வளவு?
3) ஒரு பண்ணையில் சில ஆடுகளும் புறாக்களும் இருந்தன. அவற்றின் மொத்த எண்ணிக்கை 62. அவற்றின் கால்களை எண்ணினால் 160 வருகிறது. அப்படியானால் ஆடுகள் எத்தனை, புறாக்கள் எத்தனை?
4) ராதா மற்றும் கீதாவின் தற்போதைய வயது விகிதம் 5 : 4. மூன்று வருடங்கள் கழித்து அவர்களின் வயது விகிதம் 6 : 5 ஆக இருக்கிறது என்றால் அவர்களின் தற்போதைய வயது என்ன?
5) 2,7,14, ? ?, 47 .... வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண்கள் எது, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1) எண்களின் வரிசை பின்வருமாறு அமைந்துள்ளது. 12 = 1x1 = 1; 23= 2x2x2 = 8; 34 3x3x3x3 = 81; 45 4x4x4x4x4 = 1024; ஆகவே அடுத்து வர வேண்டிய எண் = 56 = 5x5x5x5x5x5 = 78125.
2) A + B = 700 B + C = 800 A + C = 900
A + B = 700 A + C = 900
2A + B + C = 1600 2A = 1600 - (B + C) = 1600 - 800 = 800;
A = 400
ஃ B = 300 ; C = 500
3) ஆடுகள் = x ; புறாக்கள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 62;
ஆட்டுக்கு நான்கு கால்கள் = 4x;
புறாவிற்கு இரண்டு காலகள் = 2y
4x + 2y = 160;
x + y = 62 ; x = 62 - y
4x + 2y = 160 = 4 (62 - y) + 2y = 160
248 - 4 y + 2 y = 160
2 y = 248 - 160 = 88
y = 44 = புறாக்கள் = 44;
ஆடுகள் = x = 62 - y = 62 - 44 = 18
ஆக பண்ணையில் இருந்த புறாக்களின் எண்ணிக்கை = 44; ஆடுகளின் எண்ணிக்கை = 18
4) ராதாவின் வயது = 5x; கீதாவின் வயது = 4x. மூன்று வருடங்களுக்குப் பிறகு ராதாவின் வயது = 5x + 3; கீதாவின் வயது = 4x + 3; மூன்று வருடங்களுக்குப் பிறகு இருவரின் வயது விகிதம் = 6 : 5 = 6/5
5x + 3 6 ------------ = 4x + 3 5
6(4x + 3) = 5(5x + 3)
24x + 18 = 25x + 15
25x - 24x = 18 - 15
x = 3.
ஆக ராதாவின் வயது = 5x = 5 * 3 = 15 கீதாவின் வயது = 4x = 4 * 3 = 12.
5) வரிசை 5,7,9 என்ற வரிசையில் அமைந்துள்ளது. 2 + 5 = 7; 7 + 7 = 14;
வரிசையில் அடுத்து வர வேண்டியது 14 + 9 = 23; 23 + 11 = 34. ( 34 + 13 = 47) ஆகவே விடுபட்ட எண்கள் = 23, 34. |
|
|
|
|
|
|
|