இஞ்சி இடுப்பழகி 24 மான் வேட்டை ஒரு குப்பைக் கதை ஃபில்டர் காஃபி தற்காப்பு அம்மணி மெட்ரோ பத்து எண்றதுக்குள்ள
|
|
புத்தன் இயேசு காந்தி |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2015| |
|
|
|
|
ஒரு பத்திரிகையாளன் + சிறைக் கைதி இவர்களின் வாழ்க்கையைச் சொல்ல வருகிறது 'புத்தன் இயேசு காந்தி'. பத்திரிகையாளர்களாக அசோக், வசுந்தரா நடிக்க, கைதியாக கிஷோர் நடிக்கிறார். இவர்களுடன் மதுமிதா, அகில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை கவி பாஸ்கர் எழுத, வேத்சங்கர் இசையமைக்கிறார். வெற்றி வேல் சந்திரசேகர் இயக்குகிறார். சிறைக்கைதியான கிஷோரை அசோக்கும், வசுந்தராவும் சந்திக்கச் செல்கின்றனர். அவரது மனதை மாற்ற முயல்கின்றனர். ஆனால் கிஷோர் இவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். செய்தி சேகரிக்கச் சென்றவர்களே செய்தியாகும் நிலைமை! மூன்றே நாட்களில் நடக்கும் கதையான இப்படத்தின் பெரும்பகுதி இரவில் நிகழ்கிறது. இரவுநேரச் சென்னையின் இன்னொரு முகத்தை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்காக கிஷோர் நிறைய ஆராய்ந்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்து. |
|
அரவிந்த் |
|
|
More
இஞ்சி இடுப்பழகி 24 மான் வேட்டை ஒரு குப்பைக் கதை ஃபில்டர் காஃபி தற்காப்பு அம்மணி மெட்ரோ பத்து எண்றதுக்குள்ள
|
|
|
|
|
|
|