|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2015| |
|
|
|
|
1) வரிசையில் அடுத்து வரவேண்டிய இணை எது, ஏன்?
11:11:7, 8:8:13, 5:5:19, .....
2) நீலாவின் வயதைப்போல் மாலாவின் வயது தற்போது இருமடங்கு. 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, நீலாவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. இருவரின் தற்போதைய வயதுகள் என்ன?
3) அதிபர் கலந்துகொண்ட ஒரு சிறப்பு விருந்தில் மொத்தம் 36 கை குலுக்கல்கள் நிகழ்ந்தன என்றால் அதில் எவ்வளவு பேர் கலந்து கொண்டிருப்பர்?
4) 16, 12, 24, 20 .... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
5) ராமுவின் எடையைவிடச் சோமுவின் எடை 10 கிலோ குறைவு. ராமுவின் எடையையும், சோமுவின் எடையையும் பெருக்கினால் வரும் தொகை 1200 என்றால் ராமு, சோமுவின் எடை எவ்வளவு?
அரவிந்த் |
|
விடைகள் 1) வரிசை, ஒவ்வொரு இணையின் மொத்த கூட்டுத்தொகை 29 வரும் வகையில் அமைந்துள்ளது. முதல் வரிசையின் முதல் எண்ணை விட அடுத்த வரிசையின் முதல் எண் மூன்று குறைவாகவும், (11 - 3 = 8), (8 - 3 = 5) முதல் வரிசையின் இறுதி எண்ணை விட அடுத்த வரிசையின் இறுதி எண் ஆறு அதிகமாகவும் (7 + 6 = 13), (13 + 6 = 19) அமைந்துள்ளது. அந்த வகையில் அடுத்து வர வேண்டியது = 5 - 3 = 2, 19 + 6 = 25.
ஆகவே அடுத்து வர வேண்டிய வரிசை = 2:2:25
2) நீலாவின் வயது = x மாலாவின் வயது = 2x 12 வருடங்களுக்கு முன்னால் நீலாவின் வயது = x - 12 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது = 2x - 12 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, நீலாவின் வயதைப்போல் மூன்று மடங்கு என்றால் 3(x - 12) = 2x - 12 3x - 36 = 2x - 12 = 3x - 2x = - 12 + 36 x = 24
நீலாவின் வயது = 24; மாலாவின் வயது = 2 x 24 = 48 (இரு மடங்கு) 12 வருடங்களுக்கு முன்னால் நீலாவின் வயது = 24 - 12 = 12; மாலாவின் வயது = 48 - 12 = 36 (மும்மடங்கு)
3) கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை = n; மொத்தம் நிகழ்ந்த கை குலுக்கல்கள் = 2n = 36
n(n-1)/2 = 36
n2 - n/2 = 36
n2-n = 2 X 36 = 72;
9 x 9 – 9 = 72;
n = 9
விருந்தில் கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை = 9
4) வரிசை n = (a-4), x 2 என்ற முறையில் அமைந்துள்ளது. 16 - 4 = 12, 12 x 2 = 24. அடுத்த வரிசை = 24 - 4 = 20; 20 x 2 = 40. ஆக, வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் = 40.
5) ராமுவின் எடை = x சோமுவின் எடை = x - 10 = x (x - 10) = 1200 = x2 - 10x = 1200 = x2 - 10x - 1200 = 0 = (x - 40) (x + 30) = 0
எனவே ராமுவின் எடை = 40 கிலோ; சோமுவின் எடை = 30 கிலோ |
|
|
|
|
|
|
|