|
|
|
1) ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ 100ஐ விடையாகக் கொண்டுவர முடியுமா?
2) 3, 7, 15, 31, .... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
3) ஒரு படகில் 18 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகளோ மட்டுமே பயணம் செய்ய முடியும். படகில் தற்போது 25 குழந்தைகள் உள்ளனர் என்றால் இன்னும் எத்தனை பெரியவர்களை படகில் ஏற்றிக்கொள்ள முடியும்?
4) சோமுவின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 32. சோமு வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 520 வருகிறது. சோமுவின் வயதைவிட அவன் தம்பியின் வயது நான்கு வருடம் குறைவு என்றால் சோமுவின் வயது என்ன, தம்பியின் வயது என்ன?
5) சங்கர் குதிரைப் பந்தயம் காணச் சென்றான். குதிரைகள் மற்றும் மனிதர்களின் தலையை எண்ணியபோது மொத்தம் 74 வந்தது. கால்களை எண்ணியபோது 196 வந்தது என்றால் குதிரைகள் எத்தனை, மனிதர்கள் எத்தனை?
அரவிந்த் |
|
விடைகள் 1) முடியும். 33 x 3 + 3/3 = 100 5 x 5 x 5 - 5 x 5 = 100 (5 + 5 + 5 + 5) x 5 = 100
2) வரிசை n x 2 + 1 என்ற அமைப்பில் உள்ளது. அதாவது 3 x 2 + 1 = 7; 7 x 2 + 1 = 15; 15 x 2 + 1 = 31. ஆக வரிசையில் அடுத்து வரவேண்டியது = 31 x 2 + 1 = 63;
3) 30 குழந்தைகளுக்கு 18 பெரியவர்கள் சமம் என்றால் 10 குழந்தைகளுக்கு 6 பெரியவர்கள் சமம். 5 குழந்தைகளுக்கு 3 பெரியவர்கள் சமம். படகில் இருபத்தைந்து குழந்தைகள் உள்ளனர் என்பதால் மீதி 5 குழந்தைகளுக்குச் சமமான 3 பெரியவர்கள் படகில் ஏறிக்கொள்ளலாம்.
4) சோமுவின் வயது = x என்க தம்பியின் வயது = y = சோமுவின் வயதை விட 4 வருடம் குறைவு என்றால் = x - 4 x + y = 32 x + x - 4 = 32 2x - 4 = 32 2x = 32 + 4 = 36 x = 18;
எனவே சோமுவின் வயது 18. அவன் தம்பியின் வயது = 18 - 4 = 14 சோமுவின் வயது + அவன் தம்பியின் வயது = 18 + 14 = 32 சோமு வயதின் இரண்டடுக்கு + அவன் தம்பி வயதின் இரண்டடுக்கு = 18 x 18 + 14 x 14 = 324 + 196 = 520
எனவே சோமுவின் வயது 18; தம்பியின் வயது 14.
5) குதிரைகள் = x மனிதர்கள் = y தலைகளின் மொத்த எண்ணிக்கை = x + y = 74 குதிரைகளுக்கு நான்கு கால்கள்; மனிதர்களுக்கு நான்கு கால்கள். கால்களின் மொத்த எண்ணிக்கை = 4x + 2y = 196 = 2x + y = 98
2x + y = 98 (-) x + y = 74 ---------- x = 24 ----------
y = 74 - x = 74 - 24 = 50 குதிரைகள் = 24 ; ,மனிதர்கள் = 50 |
|
|
|
|
|
|
|