கணிதப்புதிர்கள்
1) ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ 100ஐ விடையாகக் கொண்டுவர முடியுமா?

2) 3, 7, 15, 31, .... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

3) ஒரு படகில் 18 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகளோ மட்டுமே பயணம் செய்ய முடியும். படகில் தற்போது 25 குழந்தைகள் உள்ளனர் என்றால் இன்னும் எத்தனை பெரியவர்களை படகில் ஏற்றிக்கொள்ள முடியும்?

4) சோமுவின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 32. சோமு வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 520 வருகிறது. சோமுவின் வயதைவிட அவன் தம்பியின் வயது நான்கு வருடம் குறைவு என்றால் சோமுவின் வயது என்ன, தம்பியின் வயது என்ன?

5) சங்கர் குதிரைப் பந்தயம் காணச் சென்றான். குதிரைகள் மற்றும் மனிதர்களின் தலையை எண்ணியபோது மொத்தம் 74 வந்தது. கால்களை எண்ணியபோது 196 வந்தது என்றால் குதிரைகள் எத்தனை, மனிதர்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com