பவித்ரா நாகராஜன் பரத நாட்டிய அரங்கேற்றம் லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம் அருண் கௌசிக் இசை அரங்கேற்றம் ஸ்நேஹா பராநந்தி கர்நாடக இசை அரங்கேற்றம் லக்ஷ்யா பாலகிருஷ்ணன் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்நேஹா ஜெயப்பிரகாஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் டியேகோவில் வைகாசித் திருவிழா வித்யா சுந்தரம் பரதநாட்டியம் நட்சத்திரங்களுடன் விருந்து
|
|
|
|
|
ஜூலை 31, 2010 அன்று, குமாரி. பூர்வி சத்யாவின் நாட்டிய அரங்கேற்றம் உட்சைட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குரு விஷால் ரமணி அவர்களின் மாணவி இவர். ஸரஸ்வதி ராக புஷ்பாஞ்சலி, ஹம்சத்வனியில் புரந்தரதாசரின் ’கஜவதன மேலுவே’, தோடி ராகத்தில் ஜதீஸ்வரம், நீதி கௌளையில் அமைந்த வர்ணம் ஆகியவை நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாயின.
ஸ்ரீகிருஷ்ண லீலையை அற்புதமான அபிநயத்துடன் ஆடி கரகோஷம் பெற்றார் பூர்வி. 'யாகி மாதவ, யாகி கேசவ' என்ற கீத கோவிந்தப் பாடலுக்கு ஆடியவிதம் பிரமிக்க வைத்தது. 'குறையொன்றும் இல்லை' பாடலை ஸ்வேதா பாடிய விதமும், பூர்வியின் நடன அசைவும் அனைவரையும் உருகச் செய்தன. இறுதியில் மிஸ்ர சிவரஞ்சனி தில்லானாவுடன் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார். |
|
பூர்வியின் அர்த்தபூர்வமான நாட்டியம், அளவான பாவ நேர்த்தி, தாள கச்சிதம் ஆகியவை அவரது திறனுக்கு பலம் சேர்ப்பவை. வாசுதேவன் (நட்டுவாங்கம்), ஸ்வேதா (பாட்டு), தனஞ்செயன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்) எனக் குழுவின் பக்கவாத்தியம் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன.
ராஜா ரங்கநாதன், கலிபோர்னியா |
|
|
More