கார்த்திகா அசோக் நாட்டிய அரங்கேற்றம் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழர் திருவிழா 2010 நியூ ஹாம்ப்ஷயர் இந்துக் கோவில் நிதி திரட்டும் விழா
|
|
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் |
|
- |ஆகஸ்டு 2010| |
|
|
|
|
|
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா இந்த வருடம் இரு பிரிவுகளாக கொண்டாடப்பட்டது. ‘இயல் விருது’ விழா சென்னையிலும் மற்றைய விருதுகளுக்கான விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்திலும் நடைபெற்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கிவரும் திரு. கோவை ஞானிக்கும், கல்வெட்டு ஆராய்ச்சி மூலம் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்திய திரு. ஐராவதம் மகாதேவனுக்கும் இவ்வருடத்திய இயல் விருது வழங்கப்பட்டது.
ரொறொன்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் ஜூலை 17 அன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட ஏனைய விருதுகள்:
புனைவு விருது: ஜெயமோகன், ‘கொற்றவை’ நாவலுக்கு.
அபுனைவு பிரிவில் இரு பரிசுகள்: ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்காக கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’ என்ற நூலை எழுதிய ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும். |
|
கவிதை விருது: 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பு, கவிஞர் சுகுமாரனுக்கு. சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் கணிமை விருது இந்த வருடம் தமிழ் லைனக்ஸ் கே.டி.ஈ. குழுவினருக்கு.
மாணவர் பரிசுத்திட்டத்தின் கீழ் கிருபாளினி கிருபராஜாவுக்கு, அவர் எழுதிய கட்டுரைக்காக.
விழாவில் சிகாகோ பல்கலைக் கழக பேராசிரியர் சாஷ எபலிங் (Sascha Ebeling) சிறப்புரை ஆற்றினார்.
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
கார்த்திகா அசோக் நாட்டிய அரங்கேற்றம் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழர் திருவிழா 2010 நியூ ஹாம்ப்ஷயர் இந்துக் கோவில் நிதி திரட்டும் விழா
|
|
|
|
|
|
|