சுக்குக் கஷாயம் இஞ்சிக் கஷாயம் ஓமக் கஷாயம் சீரகக் கஷாயம் சித்தரத்தைக் கஷாயம் மிளகு மோர் கஷாயம் கொய்யா இலைக் கஷாயம் வேப்பம்பூக் கஷாயம்
|
|
|
குளிர்காலம் வந்துவிட்டது. அதிலும் பட்சணங்களை ஒரு கை பார்க்கும் பண்டிகைக் காலம் வேறு. இந்தச் சமயத்தில் ஜலதோஷமும் வயிற்றுப் பிரச்னைகளும் வரலாம். முன்காலத்தில் இதற்கெல்லாம் வீட்டிலேயே கைவைத்தியம் செய்து வந்தனர். சில கஷாயங்களை நீங்களே தயாரிக்கலாம்.
மிளகுக் கஷாயம்
தேவையான பொருட்கள்
மிளகு - 2 தேக்கரண்டி வெல்லம் - 2 கொட்டைப் பாக்கு அளவு தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை
வாணலியில் மிளகைப் போட்டு படபடவென வெடிக்க விடவும். அதை ஒன்றிரண்டாகப் பொடி செய்து 2 கிண்ணம் கொதிக்க விட்ட தண்ணீரில் போடவும். 2 கிண்ணம் ஒரு கிண்ணமாகக் கொதித்துக் குறுகியதும் எடுத்து வடிகட்டி, தேன் விட்டு வெல்லமும் போட்டு இரண்டுவேளை குடிக்கலாம்.
ஜுரம், தலைவலி, உடம்பு வலிக்குச் சிறந்த கஷாயம் இது. வெல்லம் தேவையில்லை என்றால் வெறும் தேன் மட்டும் சேர்த்துக் குடிக்கலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சுக்குக் கஷாயம் இஞ்சிக் கஷாயம் ஓமக் கஷாயம் சீரகக் கஷாயம் சித்தரத்தைக் கஷாயம் மிளகு மோர் கஷாயம் கொய்யா இலைக் கஷாயம் வேப்பம்பூக் கஷாயம்
|
|
|
|
|
|
|