குதிரைவாலி பிடி கொழுக்கட்டை
|
|
|
|
சிறுதானியங்கள் நமது சமையலறையில் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் உங்களுக்குச் சில குதிரைவாலி (Barnyard millet) தயாரிப்புகள்.
குதிரைவாலி இட்லி
தேவையான பொருட்கள் குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம் புழுங்கலரிசி - 1/2 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் வெந்தயம் - 1 மேசைக்கரண்டி கொள்ளு (முளை கட்டியது) - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை அரிசிகள், பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் நான்கு மணி நேரம் ஊறப்போட்டுக் களைந்து மிக்சியில் இட்லிக்கு அரைப்பதுபோலச் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும், அரைக்கும்போது முளைகட்டிய கொள்ளும் சேர்த்துப் போட்டு அரைத்து உப்புப் போட்டு வைத்துவிடவும். மறுநாள் இட்லி வார்க்கவும். இது மிகவும் மிருதுவான சுவையான இட்லி. ஆர்த்ரைடிஸ், டயபடீஸ்காரர்களுக்கு மிகவும் நல்லது. வெங்காயம், தக்காளிச் சட்னியுடன் சாப்பிடலாம். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
குதிரைவாலி பிடி கொழுக்கட்டை
|
|
|
|
|
|
|