பிரட் டொக்லா பிரட் இட்லி பிரட் தயிர் வடை அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை அடை தவலை அடை பயிறு அடை தேங்காய் அடை
|
|
|
மாறிவரும் காலத்திற்கேற்ப நமது அன்றாட உணவு பழக்கமும் மாறிவருகிறது. அன்றைய காலம் போல் ஒவ்வொன்றையும் ரசித்து செய்வதற்குகூட நேரமில்லாமல் ஒவ்வொரு வரும் அங்கும் இங்கும் நம்முடைய தேவைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்.
நாம் நம் இந்திய உணவு அதுவும் நமது தென்னிந்திய உணவு கிடைக்க சில நேரங்களில் ரொம்பவும்தான் போராட வேண்டியிருக்கிறது.
பிரட் இன்றைய அவசரமான உலகத்தில் நமக்கு காலை உணவாக மாறிவிட்டது. வெறும் பிரட்டாக சாப்பிடுவதற்கு சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். தோசை, இட்லி, உப்புமா, வடை என்று எதுவும் நமக்கு கிடைக்காமல் இருந்தாலும் நமக்கு அதிகம் கிடைக்கும் பிரட்டை கொண்டே அதை நாம் தயாரித்து சாப்பிடலாம்.
பிரட் பீஸா
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 5 தக்காளி சாஸ் - 5 மேஜை கரண்டி துருவிய சீஸ் - 5 மேஜை கரண்டி மிளகு - 1/2 டேபிள் கரண்டி பச்சை மிளகாய் - 3(பொடி பொடியாக நறுக்கியது) கொடைமிளகாய் - 1(பொடி பொடியாக நறுக்கியது) துருவிய வெங்காயம் - 2 டேபிள் கரண்டி வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
ஒவ்வொரு பிரட் துண்டுகள் மீதும் 1 டேபிள் ஸ்பூன் அளவு தக்காளி சாஸை தடவி கொள்ளவும்.
பிறகு சீஸ், துருவிய வெங்காயம், மிளகு, பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்றாக தேவையான அளவு உப்பு சேர்த்து சாலட் போல் கலந்து வைக்கவும்.
ஒவ்வொரு பிரட் துண்டுகள் மீதும் மேற்குறிய சாலட்டில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வைக்கவும்.
பிறகு சிறிதளவு வெண்ணெய் எடுத்து ஒவ்வொரு காய்கறிகள் வைத்துள்ள பிரட் துண்டுகளின் மீதும் தடவவும்.
பிரட் அவனில் 350 டிகிரி உஷ்ணத்தில் பிரட் துண்டுகளை வைத்து அது பொன்னிறமாக வரும் வரை வேகவைக்கவும்.
பிறகு இதை முக்கோணவடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பிரட் டொக்லா பிரட் இட்லி பிரட் தயிர் வடை அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை அடை தவலை அடை பயிறு அடை தேங்காய் அடை
|
|
|
|
|
|
|