|
பிஞ்சுக் கைகள் படைத்த பிள்ளையார்கள் |
|
- பத்மா மணியன்|அக்டோபர் 2013| |
|
|
|
|
சாக்ரமென்டோவில் என் மகள் ஸ்ரீவித்யா சாய்கிருஷ்ணனனின் தோழி அனுப்ரியா-ராம்ராஜ் தம்பதியர் விநாயக சதுர்த்திக்கு அண்டை அயல் வீட்டுச் சிறுவர்.சிறுமியருக்கு வித்தியாசமான ஒரு வேலை கொடுத்தனர். மைக்கல்ஸ் களிமண்ணால் கற்பனைக்கேற்பத் தமது கைகளால் பிள்ளையார் செய்து கொண்டு வரவேண்டும் என்பதே அது. அவ்வளவுதான், 35 குழந்தைகள் மூஞ்சூறு வாகனரை விதவிதமாகச் செய்து கொண்டு வந்து அசத்திவிட்டார்கள். ஒரு குழந்தை குழக்கட்டையையே அவருக்கு மகுடமாக்கி விட்டது!
தாம் செய்த பிள்ளையாரை வீட்டிற்கு எடுத்துச் சென்று மறுநாள் விநாயகர் பூஜை செய்யும்போது அவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. களிமண் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காது என்பதால் நாம் பிள்ளையாரைக் களிமண்ணில் செய்கிறோம் என்பதைக் குழந்தைகள் தெரிந்து கொண்டார்கள். (கெமிகல் பெயிண்ட் அடிக்கக் கூடாது!) நீங்கள் இந்திய விழாக்களுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்குப் புதியன செய்யச் சொல்லலாம். அவர்கள் கற்பனைக்குச் சவாலாக இருப்பதோடு, விழாக்களின் உட்பொருளைப் புரிந்துகொள்ளவும் இது பயன்படும். "முதலில் பெற்றோராகிய எங்களுக்குப் புரியுமே" என்கிறாள் என் மகள். அதுவும் சரிதான்! |
|
பத்மா மணியன், சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா. |
|
|
|
|
|
|
|