குறுக்கெழுத்துப்புதிர் மற்றும் பிற சொல் விளையாட்டுகளையும் குறித்து ஒரு கூகிள் மடற்குழு தொடங்கப்பட்டுள்ளது. அம் மடற்குழுவில் இப்புதிர்களை முயலும் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன். சில சொற்களுக்கு வாசகர்களே குறிப்பு எழுதும் "போட்டியும்" அதில் நடைபெறுகிறது. அவ்வாறு ஒரே சொல்லுக்குப் பலரும் முன்வைக்கும் புதிர்க்குறிப்பில் சிறந்ததை எழுதியவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு அக்டோபர் 2008 தென்றல் குறுக்கெழுத்துப்புதிரில் மூன்று சொற்களுக்கு குறிப்பெழுதும் வாய்ப்பு (அவருடைய பெயருடன்) அளிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். kurukkumnedukkum@googlegroups.com என்ற குழுவில் இணைய விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். சேர்ந்து கலந்து கொள்ள நேரமில்லாதவர் அம்மடல்களைப் படிப்பதற்குத் தடையேதுமில்லை.
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை
செப்டம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@ tamilonline. com. செப்டம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
ஆகஸ்டு 2008 புதிர் அரசிகள்/மன்னர்கள்
1.விஜயா அருணாசலம்,ஃப்ரீமாண்ட், கலி.
2. மீ. முத்துசுப்ரமண்யம், ராஸ்வெல், ஜார்ஜியா
3. ராஜேஷ் கார்கா, நியூஜெர்ஸி
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
ஹேமா இலக்குமிநாராயணன், சான்டியாகோ, கலி.
ராமையா நாராயணன், பால்சம், கலி.
மாலதி கண்ணன், தி.நகர், சென்னை
ஸ்ரீதரன் கிருஷ்ண மூர்த்தி,ஃப்ரீமாண்ட், கலி.
எஸ்.பி. சுரேஷ், மயிலை, சென்னை
லக்ஷ்மி சுப்ரமணியம், மும்பை
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
வி.ஆர். பால கிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
சுமித்ரா ஜயஷங்கர்,ஃப்ரீமாண்ட், கலி.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
ஜூலை மாதப் புதிர் விடைகளைக் கண்டவர்கள் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போனவர்கள்:
வி.என். கிருஷ்ணன், சான்டா க்ளாரா, கலி.
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி,ஃப்ரீமாண்ட், கலி.