Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
கணினியில் த்மிழ்ச் சேனல்கள் பார்க்க ChannelLive.tv
'Catch Your Mind' தமிழர் எடுக்கும் ஆங்கிலத் திரைப்படம்
இரக்கமுள்ள ஆஷ்ரயா
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeஆஷ்ரயாவுக்கு வயது ஏழுதான். பென்சில்வேனியாவின் காலேஜ்வில்லில் உள்ள சுருதிலயம் அகாடமி மாணவி. உலகின் மிகப்பெரிய மிருகநல அமைப்பான PETA (People for Ethical Treatment to Animals) ஆஷ்ரயாவுக்கு 'இரக்கமுள்ள குழந்தை' (Compassionate Kid) விருதைக் கொடுத்துள்ளது.

ஆஷ்ரயாவின் தோழி ஹன்னா. அவரது வீட்டுக் கொல்லையில் ஒரு வளையில் ஆமை ஒன்று வசித்து வந்தது. ஹன்னாவின் அண்ணனும் அவனது நண்பனுமாகச் சேர்ந்து இந்த ஆமையைப் பிடித்து ஒரு சிறிய பெட்டிக்குள் அடைத்து வைத்துக்கொண்டார்கள். பெட்டிக்குள்ளே காற்றோ வெளிச்சமோ போக வழி கிடையாது.

இது ஆஷ்ரயாவுக்குப் பிடிக்கவில்லை. காரணம், ஆமை தன் சுதந்திரத்தை இழந்துவிட்டது மட்டுமல்ல, உரிமம் பெறாத பிராணிகளை வைத்துக்கொள்வது பென்சில்வேனியா மாநிலச் சட்டத்துக்கு எதிரானது. ஒரு காகிதத்தில் இந்த விஷயங்களை விளக்கி எழுதி ஆஷ்ரயா ஹன்னாவின் பெற்றோரிடம் சேர்த்தார்.

அத்தோடு விடாத ஆஷ்ரயா, மீண்டும் அவர்களைச் சந்தித்து ஆமையை விடுவிப்பதன் அவசியத்தை விளக்கி மன்றாடினார். அனுமதியில்லாமல் பிராணி வளர்க்க அந்த மாநிலச் சட்டம் ஒப்புவதில்லை என்பதும் ஆஷ்ரயா சொல்லித்தான் அவர்களுக்குத் தெரியவந்தது.

மறுநாள், ஆமை மீண்டும் சுதந்திரப் பிராணியானது!

'மிருகங்களைச் சித்ரவதை செய்வது நம் மனதைப் பல சமயங்களில் பாதிக்கிறது. ஆனால் யாரும் அதற்காக எதுவும் செய்துவிடுவதில்லை. ஒரு 7 வயதுக் குழந்தை விடாமல் முயற்சி செய்தது... ரொம்பவே சிறப்பானது' என்கிறார் PETA ஊழியர் ஒருவர். பத்திரிகைகளிலும் ரேடியோவிலும் ஆஷ்ரயாவைப் பற்றிச் செய்திகள் வெளியாயின.

மேனகா காந்தியின் 'கருணாச்ரமம்' என்ற பிராணிநல அமைப்புக்கு, ஆறு வயதாக இருக்கும்போதே ஆஷ்ரயா இசை நடன நிகழ்ச்சிமூலம் நிதி திரட்டி அனுப்பினார். 'குழந்தை நல்லெண்ணத் தூதுவர்' என்று ஆஷ்ரயாவுக்குப் பட்டம் கொடுத்துள்ளனர். இரண்டாம் வகுப்பில் படிக்கும் இவர் மிகச் சிறுவயது ஆசிரியையும் ஆவார்! எட்டு குழந்தைகளுக்கு இந்திய இசையும் வயலினும் கற்பிக்கிறார்.
2008 நவம்பர் மாதம் இவர் வாசித்த இந்திய, மேற்கத்திய பியானோ இசைத்தகடு வெளியாக இருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் வருமானம் கருணாச்ரமம், SEVA, PETA ஆகிய சேவை அமைப்புகளுக்குத் தரப்படும்.

ஆஷ்ரயா ஓர் இளம் எழுத்தாளரும் ஆவார். அமெரிக்காவின் 'Amazing Kids' பத்திரிகையில் எழுதிவருகிறார். 'The Ray of Hope' என்ற தனது முதல் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். மஹாத்மா காந்தி போதித்த கருணை, கருணைச் செயல்கள் போன்றவற்றை இந்த நூல் சித்திரிக்கும்.

இந்த அற்புதமான திறமையும் கருணையும் கொண்ட குட்டி ஆசிரியைக்கு 'ஆதர்ச விருது' கொடுக்க சுருதிலயம் அகாடமி தீர்மானித்துள்ளது. 2009ஆம் ஆண்டின் 'மஹாத்மா காந்தி' விருதை மேனகா காந்தியின் கருணாச்ரமம் கொடுக்கவுள்ளது. கிருஷ்ணையர் அறக்கட்டளையின் 'அமைதி விருது', கிரானிக்கிள் சாதனையாளர் விருது (Chronicle Achiever Award) ஆகியவை ஆஷ்ரயா அனந்தநாராயணனை அலங்கரிக்கக் காத்திருக்கின்றன.

Kids Talk Productions-ன் நிறுவனரான நைனன் தெ ரோஸா எழுதும் புத்தகத்தில் ஆஷ்ரயா இடம்பெறுவதோடு, அவரது டிவி நிகழ்ச்சியான ' Voices of Tomorrow'விலும் வர இருக்கிறார் ஆஷ்ரயா.

உலகில் அமைதியும் நல்லிணக்கமும் வளர ஆஷ்ரயா போன்றவர்கள் இன்னமும் ஏராளமாக வரவேண்டும் என்று தென்றல் வாழ்த்துகிறது.
More

கணினியில் த்மிழ்ச் சேனல்கள் பார்க்க ChannelLive.tv
'Catch Your Mind' தமிழர் எடுக்கும் ஆங்கிலத் திரைப்படம்
Share: 




© Copyright 2020 Tamilonline