Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜூன் 2009 குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|ஜூன் 2009|
Share:
Click Here Enlarge'இன்று ஒரு தகவல்' தென்கச்சி சுவாமிநாதன் சில ஆன்மீகத் தகவல்களை வானொலியில் தந்ததால் அவர் ஒரு மகானாயிருப்பார் என்ற பிம்பம் தோன்றிவிட்டதைச் சென்ற தென்றல் நேர்முகத்தில் அவருக்கேயுரிய நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். அதுபோல் என்னைப் பற்றி கர்நாடக சங்கீதம், தமிழிலக்கியம், இதர எல்லாக் கலைகளிலும் அறிஞன் என்ற கருத்து உருவாகியிருக்கலாம் என்பது பத்மாவதி சித்தானந்தத்தின் மின்னஞ்சல் மூலம் தெரியவருகிறது. நல்லவேளை blockhole என்பதை blackhole என்று சென்றமாதம் உளறியதிலிருந்து நான் அப்படிப்பட்டவனில்லை என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள் (நன்றி இலவச கொத்தனாரே). ஓரளவு அறிவுடன், சொல்லைச் சிலம்பமாடும் திறமும் இருந்தால் எவரும் புதிர்களை உருவாக்கலாம். புதிருக்கு பதில் கண்டுபிடிப்பதுதான் கடினம். கேள்வி கேட்பது என்ன திருவிளையாடல் தருமி வேலைதான்.

குறுக்காக:
5. தேசமாதா(?) மானினம் இல்லாமல் தாவு (2)
6. புலம்பெயர்ந்தோர் ஏக்கத்துடன் செல்வோமா என்று நினைக்கும் ஊர் (6)
7. உலகெங்கும் அறிவியலைச் சிறப்பாகப் பரப்பியோர்க்குப் பரிசு ஐந்து இல்லாமல் கலங்கிய கருங்காலி (4)
8. தொண்டர்களின் தலைவனே, களத்திலிறங்கு! மக்களவை செல்ல வெல்ல வேண்டும் (3)
9. தம்பியின் குற்றத்திற்கு மாமன்களின் தலைகளை எடுப்பது நியாயந்தானா? (3)
11. முதலில் சுட்ட காயத்தின் அடையாளம் மண்ணில் பதிந்தது (3)
13. அடிமையாக இருக்கும் அழகி சரயு நதியோடும் நாட்டை ஆண்டவர் (4)
16. மேகங்களுக்கும் மேலே சஞ்சரித்தாலும் பருந்தாகாது (6)
17. துன்பத்தைக் குறை சொல்லாமல் ஏற்றுக் கொள் தோழி (2)

நெடுக்காக:
1. பாலில் பிறந்ததும் பயிரைக் காப்பதும் சேர்ந்த ஊரில் அனல் மின்னாலை (4)
2. பல்லுடைந்த பகையால் கெட்ட காதலா! இந்நிலையில் எதுவும் செய்ய முடியாது (5)
3. காட்சிப் பிழையில் தோன்றிய ஒரு மணிகொண்டான் (3)
4. இசை உலகைத் துறந்த பாணர் இந்த இடத்தில் அடக்கம் (4)
10. மெய்யின்றி கோவிந்தா கலங்கி விஷ்ணுவிடம் புகுந்தால் கிறிஸ்தவர் அவ்விடம் வருவர் (5)
12. உடலை விற்பவளை விலக்கிப் போராடிய கள வணிகர் கை பெருகட்டும் (4)
14. பாதி விஞ்ஞானி சர வெடிப்பில் தர்மாவதியிடம் ஜனித்தவள் (4)
15. நாக்கை நீட்டி ஆடவைக்கும் இசைக் கருவி (3)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com
மே 2009 புதிர் மன்னர்கள்/அரசிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline