|
|
|
வீட்டில் பெரிய சண்டை! பதின்மூன்று வயது மகனுடன்தான். வாதம் செய்யும் வயதுபோல இது! மறந்து வேறு தொலைத்துவிட்டது.
நேரத்திற்குத் தூங்கி எழ - வாதம் நடுங்கும் குளிரில் கால்சட்டை அணிய - வாதம் வீட்டுப் பாடம் செய்ய - வாதம் காய்கறி சாப்பிட - தினமும் வாதம்
ஒரு வாரமாக நடந்த வாதத்தை முடிக்கவந்த சண்டைதான் அது; வாய் வலித்து, அழுது, மனமுடைந்து உறங்கச் செல்கையில் மணி பதினொன்று.
மறுநாள் பள்ளி சென்றேன் அவனை அழைக்க, இறுகிய முகத்துடன், காரில் என்னைப் பார்த்ததும் சிரித்து அம்மா என்கிறான், தண்டிக்கமட்டுமே தெரிந்த என்னை மன்னித்துவிட்ட குழந்தை! |
|
ஜெயா மாறன், அட்லான்டா, ஜார்ஜியா |
|
|
|
|
|
|
|