FETNA அமைப்பாளர்கள் பேசுகின்றனர் நல்லதும் பொல்லாததும்
|
|
|
2006 ஜூலை 1, 2, 3 தேதிகளில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நியூ யார்க் மன்ஹாட்டன் மையத்தில் ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழர் திருநாள் என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியை முதல்நாளன்று துவக்கி வைக்க வருகிறார்கள் சரத்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார். முதல் இரண்டு நாட்களிலும் முக்கிய நிகழ்ச்சிகள் நடை பெறும். மூன்றாவது நாளன்று 'கலைஞர் களுடன் சந்திப்பு'ம், 'மாலைக் கடலோடுத' லும் நடைபெறும். 'நட்சத்திர இரவுகள்' நிகழ்ச்சியிலும் சரத்குமார் பங்கேற்பார். ராதிகா சரத்குமார் ஊடகங்கள் பற்றிய கலந்துரையில் பங்குகொள்வார். கவிப்பேரரசு, பத்மஸ்ரீ வைரமுத்து தலைமை உரையாற்றுவார்.
இதைத் தவிரக் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
டாக்டர் விஜயலக்ஷ்மி மற்றும் டாக்டர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் 18 பேர் கொண்ட குழுவினருடன் வழங்கும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி. இதில் கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மி, தீப்பந்தல் ஆட்டம் ஆகியவை இடம்பெறும்.
'நட்சத்திர இரவு மற்றும் மெல்லிசை' நிகழ்ச்சியில் வாணிஜெயராம், ஹரிஷ் ராகவேந்திரா, மாதங்கி ராஜசேகர் ஆகிய இசைக் கலைஞர்களோடு நடிகர்கள் ஸ்வாதி, வினோதினி, குட்டி (ஒரு கால் இழந்தவர்), தேவிப்ரியா, மணிகண்டன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மணிமாலா மூர்த்தி ஆகியோர் பங்குகொள்கின் றனர். நடனங்களை அமைத்திருக்கிறார் பாலா. எழுத்தாளர் மற்றும் பத்திரிகை யாளராக இருந்து படத்தயாரிப்பாளராக மாறிய R. புவனா இந்நிகழ்ச்சியை இயக்குகிறார். |
|
இசைக்குழுவை நடத்துகிறார் மெர்வின் மைக்கல் (ஜியார்ஜியா). இசைக் குழுவில் பாடுகிறார் அனிதா கிருஷ்ணன் (நியூ ஜெர்சி).
'திரைகடல் ஓடிவந்து - பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்துக்கு நடுவராக இருந்து நடத்துகிறார் பேரா. முனைவர் அறிவொளி.
கவிமாமணி இலைந்தை சு. ராமஸ்வாமி அவர்கள் 'தமிழால் முடியும்' என்ற தலைப்பிலான கவியரங்கத்திற்குத் தலைமையேற்று நடத்துவார்.
ஆங்கில மூலம்: சித்ரா வைத்தீஸ்வரன் தமிழில்: மதுரபாரதி |
|
|
More
FETNA அமைப்பாளர்கள் பேசுகின்றனர் நல்லதும் பொல்லாததும்
|
|
|
|
|
|
|