கஜா புயல்: TNF நிவாரணப் பணி
|
|
|
|
நவம்பர் 3, 2018 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ, சான் மேட்டியோ ஈவென்ட் சென்டரில் நடந்த அகப்பொறியியல் (Inner Engineering) நிகழ்ச்சியை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களே நேரில் வந்திருந்து நடத்தினார். வட அமெரிக்காவில் நடந்த அகப்பொறியியல் நிகழ்ச்சிகளில் மிகப்பெரியதான இதனில் 3400 பேர் பங்கேற்றனர். இதில் ஆஸ்திரேலியா, பிரேசில், சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், அயர்லாந்து, ஜப்பான், ஃபிரான்சு உட்படப் பலநாடுகளில் இருந்தும் பங்கேற்க ஆர்வலர்கள் வந்திருந்தனர்.
"கலிஃபோர்னியா திரைப்படங்களில் எப்போதும் மனிதர்கள் வேற்றுக்கிரக வாசிகளுடன் போராடுவதாகக் காண்பிக்கிறார்கள். ஆனால், உண்மையில் நமது பிரச்சனை வேற்றுக் கிரகப் போராளிகளுடன் இல்லை, நமக்குள்ளேயே நடக்கும் போர்தான்" என்று சத்குரு கூறியபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது. எப்போது நீங்கள் நூறு சதவிகிதம் வாழ்க்கைக்குச் 'சரி' என்று சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டார். மேலும் தொடர்ந்த அவர், "நீங்கள் தொழில்நுட்பப் பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்; ஆனால், இதைவிட (மனித உடலைவிட) மேலான தொழில்நுட்பத்தைப் பார்த்ததுண்டா?" என்று கேட்டார்.
சக்திவாய்ந்த சாம்பவி முத்திரை உபதேசத்தில் அரங்கில் தியானத்தின் ஆனந்த அலைகள் பெருகின. இரண்டு நாள் நிகழ்ச்சி பங்கேற்றவர் மனத்தில் மேலும் ஆன்மதாகத்தைத் தூண்டிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. உள்நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அது ஒவ்வொருவருக்கும் அமைந்தது. கடந்த 35 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த ஆற்றல்மிக்க செயல்முறை ஆகும் அது.
வாழ்க்கையை நீங்கள் விரும்பியவாறு அமைத்துக்கொள்வதற்கான பல கருவிகளையும், தீர்வுகளையும் தருவதாக அகப்பொறியியல் உள்ளது. யோக விஞ்ஞானத்தைப் பிழிந்தெடுத்த சாரமாக உள்ள இந்தச் செயல்முறை ஞானம், வாழ்க்கையின் அடிப்படையை அறிவுபூர்வமாக ஆராயும் வாய்ப்பைத் தருகிறது. ஒருவரது உடல், மனம், உணர்வுகள், அடிப்படைச் சக்தி ஆகியவற்றை நிர்வகிப்பதற்கான செயல்முறை ஞானத்தைத் தருகிறது. யோகியும் தீர்க்கதரிசியுமான சத்குரு அவர்களால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிய: www.InnerEngineering.com |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
கஜா புயல்: TNF நிவாரணப் பணி
|
|
|
|
|
|
|