Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
இலங்கைத் தமிழருக்கு உதவி
- கௌரி மகேந்திரன், மதுரபாரதி|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeமீண்டும் ஜூன் 21 முதல் 23 வரையிலான நாட்களில் செட்டிகுளம், வவுனியா பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சின்மயா மிஷன் தொண்டர்கள் சென்றிருந்தோம். எங்களோடு பாப்பா ராம்தாஸ் அறக்கட்டளையின் (ஆனந்தாஸ்ரமம்) தொண்டர்களும் வந்திருந்தனர். இந்த நாட்களில் ஏறத்தாழ 22 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைப் பொருட்களை 20 பிளாக்குகளில் இருந்த 10,000 பேருக்கு வழங்கினோம்.

தொற்று நோயாலும் ஊட்டக் குறைவாலும் கைக்குழந்தைகளும் முதியோரும் மரணத்தைத் தழுவி வருகின்றனர். இறப்பு விகிதம் அதிகரித்துத்தான் வருகிறது. அதிலும் மழைக்காலத்தில் அனைவரும் மண் தரையில் படுக்க வேண்டிய நிலை வரும்போது நோய்வாய்ப்படுவது அதிகரிக்குமே என்பது இப்போது மிகப்பெரிய கவலை. அங்கே வெள்ளம் பெருகும் அபாயமும் உள்ளது.

முகாம்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் குழந்தைகளுக்குப் பாடநூல்கள், கதைப் புத்தகங்கள் (இவை பெரியோருக்கும் தேவை), கேரம் போன்ற விளையாட்டுப் பொருட்களும் கொடுத்தால் நல்லது என்று கூறினர். சில முகாம்களில் தற்காலிக வகுப்பறைகள் அமைத்து 8 முதல் 10 வரை வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கிவிட்டனர். போதிய அளவில் நல்ல குடிநீர் கிடைப்பது இன்னமும் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன், ஹிந்து காங்கிரஸ் மனிதநேயம் போன்ற அமைப்புகளும் அங்கே சேவை செய்கின்றன.
Click Here Enlarge60 வயதுக்கு மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே இருக்கும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்திருக்க அனுப்பவும், ஆதரவற்றோரை வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலுள்ள ஏதிலியகங்களுக்கு அனுப்பவும் அரசு தற்போது ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

இதற்கான சின்மயா மிஷன் இணையதளம்: www.cordsrilanka.org

எல்லோரும் ஒரு கை கொடுத்தால் பெரிய நன்மைகளைச் செய்ய முடியும். உங்கள் நன்கொடையை ‘Chinmaya Mission West' என்ற பெயருக்குக் காசோலையாக அனுப்பவேண்டும். காசோலையில் கீழே "CORD-Sri Lanka" என்று தவறாமல் குறிப்பிடுங்கள். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323

அனுப்ப வேண்டிய முகவரி:
Chinmaya Mission West,
Meera Raja,
2246 West Cullom Ave.,
Chicago, IL 60618, USA.

ஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline