|
அறிவுத் திறன் வளர்ச்சிக்கு www.jumpGrades.com |
|
- |ஆகஸ்டு 2007| |
|
|
|
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் என்றாலே கொண்டாட்டம் தான். தினமும் ஒரு 15 நிமிடங்களை அதில் செலவிட வைப்பதன் மூலம் அவர்களது அடிப்படைக் கணிதம் மற்றும் வாசிப்புத் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளை www.jumpGrades.com உருவாக்கியுள்ளது.
மாதா அமிர்தானந்த மயி அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (www.amrita.edu) இதை அமெரிக்க தேசியக் கல்வித் தரத்துக்கு ஏற்ப வடிவமைத்துள்ளது. கிண்டர் கார்டன் முதல் ஆறாம் நிலை வரையிலு மான மாணவர்களின் கணிதம் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துபவையாக இப்பயிற்சிகள் உள்ளன. இந்தப் பயிற்சி முறையின் சிறப்பு என்னவென்றால், தொடக் கத்திலேயே மாணவரின் படிநிலையைக் கணக்கிட்டு அதற்கேற்ற படியிலிருந்து பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரின் அறிவுத் திறன், வேகம் இவற்றுக்கேற்பப் பயிற்சிகள் இருக்கும். இதில் 2,000க்கும் மேற்பட்ட பாடங்களும், 100,000க்கும் மேற்பட்ட செயல்முறைப் பயிற்சிகளும் உள்ளன. |
|
படிப்படியாகவும் ஊடாடுவனவாகவும் (interactive) காட்சிக்கினியவாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடங்களும் பயிற்சிகளும் கல்வித் திறனை வெகுவாக உயர்த்த வல்லன. அன்றாடம் ஒரு பாடத்துக்கு 15 நிமிடங்கள் செலவழித்தால் போது மானது. மாணவர்கள் அடைந்த முன்னேற்றம் அவ்வப்போது மதிப்பிடப் பட்டு மதிப்பெண் அறிக்கை தரப்படுவதால் பெற்றோர்களும் மாணவர்களும் வளர்ச்சியை அறிந்து கொள்வது எளிதாகிறது.
இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள சிறியதொரு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அரவணைக்கும் ஞானியான மாதா அமிர்தானந்த மயி அவர்களின் இந்த வருவாய் லாபநோக்கற்ற, சேவை அமைப்பான MA மையத்தின் பொதுநலச் சேவைப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. ஒருமுறை www.jumpGrades.com வலையகத் துக்குச் சென்று அங்கு இலவசமாகக் கிடைக்கும் பயிற்சிகளைச் சுவைத்துத்தான் பாருங்களேன். |
|
|
|
|
|
|
|