காதில் விழுந்தது.....
|
|
|
நாங்கள் கலிபோர்னியாவில் சாக்ரமண்டோவிலுள்ள ·போல்ஸம் பகுதியில் வாழ்கிறோம். என் மகனும் இன்னும் பத்துப் பதினைந்து இந்திய மாணவர்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக முதுகலை மாணவர்களாக அமெரிக்காவில் வாழ்க்கையைத் துவங்கினர். தற்சமயம் அவர்கள் மனைவி, குழந்தைகளுடன் வாழ்கிறார்கள். இவர்களுக்கு 6 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் ஒரு நண்பர் வீட்டிற்குப் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். இங்கே குழந்தைகள் பல விளையாட்டுப் பொருட்களைப் பகிர்ந்து விளையாடி மகிழ்கிறார்கள். தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பெற்றோர்களுடன் மட்டுமே தனியாக இருக்கும் இந்தக் குழந்தைகள் பல புதியவர்களை இங்கே சந்தித்துப் பழகுகிறார்கள். மேலும் அவர்கள் புரிந்துக் கொள்ளும் அளவில் கை தட்டுதல், தலை அசைத்தல், நர்சரி ரைம்ஸ் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இந்தியப் பழக்கங்களான வணக்கம் சொல்லுதல், நமஸ்கரித்தல் போன்ற செயல்களையும் கற்றுக் கொள்கின்றனர்.
இதற்கு Folsom Play Group என்று பெயரிட்டு அழைக்கிறோம். உங்கள் பகுதியிலும் செய்து பார்க்கலாமே! |
|
மாலதி சுந்தரம் |
|
|
More
காதில் விழுந்தது.....
|
|
|
|
|
|
|