|
தமிழ் நாடு அறக்கட்டளையின் 32-ம் ஆண்டு நிறைவு விழா |
|
- கோம்ஸ் கணபதி|பிப்ரவரி 2006| |
|
|
|
மெமோரியல் தினத்தையொட்டி 2006 மே மாதம் 27, 28 நாட்களில் மிச்சிகன் தமிழ்ச் சங்கம், லேன்சிங் தமிழ்ச் சங்கம், மற்றும் ·ப்ளின்ட் தமிழ்ச் சங்கம் ஆகியவை தமிழ்நாடு அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் மாநாட்டின் நோக்கம் தமிழகத்தில் குழந்தைகள் நலம் குறித்ததாகும். விழாத் தலைப்பு 'தாய் மண்ணுக்கு உதவுவோம், சேய்நலம் பேணுவோம்'.
தாய் மண்ணுக்கு உதவுதல் அறக்கட்டளையின் அடிப்படைக் கொள்கை. விதவை மேம்பாடு, கணினிக் கல்வி, ஆதரவற்றோர் நல அமைப்பு, பள்ளிச் சீருடை, புயல்/வெள்ளம்/நெருப்பு போலும் இயற்கைச் சீற்றங்களின் போது அன்புக் கரம் நீட்டித் துயர் துடைத்தல் என்று பல பரிமாணங்களில் அறக்கட்டளை தொண்டாற்றிவருகின்றது.
குழந்தைகள் நலம் குறித்து அறக்கட்டளை வால்ஷ் பெருமாட்டி, பெக்கி டக்ளஸ் மற்றும் கி·ப்ட் அறக்கட்டளையினர் வழியாக ஆங்காங்கே உதவிபுரிந்து வந்திருக்கிறது. 'சேய்நலம் பேணுவோம்' என்னும் கூர்த்த நோக்கோடு இவ்வாண்டு விழாவை நெறிப் படுத்துவது வரவேற்கத் தக்கதாகும்.
தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாழுவோர் பெறும் மருத்துவ வசதிகள் ஏழைக் கிராமங்களுக்கு இன்னும் எட்டாக் கனிகளே. தக்க நேரத்தில் தரமான மருத்துவ உதவி கிட்டாமல் வயிற்றுப் போக்கு, கண் நோய், மலேரியா போன்ற வற்றால் மாண்டு போகும் குழந்தைகள் ஏராளம். |
|
இவ்விழாவில் கேளிக்கைகளுக்கும் தக்க இடம் உண்டு. மிச்சிகன் மாநிலம் டெட்ராயிட் பெருநகர் டியர்போர்னின் ·போர்டு கலையரங்கில் நிகழவிருக்கும் அறக்கட்டளையின் 32 ஆண்டு நிறைவு விழாவின்போது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் முழக்கமிட விருக்கின்றன. சிறப்புச் சொற்பொழிவாளர் கள், திரைத் தாரகைகள், இசை வல்லுனர் என்று கண்ணுக்கும் காதுக்கும் விருந்து படைக்க விழாக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
விழா குறித்த விபரங்களுக்கு: www.tnf2006.com மற்றும் www.tnfusa.org.com
கோம்ஸ் கணபதி |
|
|
|
|
|
|
|