தமிழ் இணையம் 2002 காசு மேல காசு - தமிழ் நகைச்சுவை நாடகம்
|
|
சிகா கோவில் பெருவிழா |
|
- |ஜூலை 2002| |
|
|
|
காட்டாற்றின் வெள்ளத்தில் அடித்து, புரண்டு, முட்டிமோதி வரும் சாதாராண கற்களும், அழகான குழாங்கற்களாக ஆக்கப்படுவது போன்று, காலவெள்ளத்தில் அடித்து, மோதி கரைவந்துள்ளது தமிழ் இனம்!
ஆம் அழகான குழாங்கற்களாக! அதல பாதாளத்தில் இயற்கையின் அழுத்தத்தில் - வெட்பதட்ப நிலையில் வைக்கப்பட்ட சாதாரண கரித்துண்டு. வைரங்களென ஒளி உமிழ்ந்து வெளிப்படுவது போன்று, உலகவாழ் பல சமுதாயங்களின் பல்வேறு சக்திகளின் அழுத்தல் சேர்ந்து தனக்கென்ற குணம் - அக்குணம் தமிழினத்தையும் வைரம் போல் ஆக்கியுள்ளது.
அழகான குழாங்கற்களையும், அற்புதமான வைரங்களையும் வெளிக்கொணர்ந்து, யாவருமே இரசிக்கும்படியாக, அழகு, பெருமை உணரச் செய்யும் வகையில் இவ்வாண்டு 'சிகாகோவில் ஒரு பெருந் தமிழர்விழா' உருவாகிக் கொண்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்று! 'வீட்டைக் கட்டிப் பார்' , 'கல்யாணம் செய்து பார்' என்பார்கள்; ஆனால் இப்படியான 'ஒருவிழா - தமிழர் விழா' எடுப்பது என்பது - எல்லாவற்றையும் விஞ்சியது தான்! என்றாலும் இதனை தம்மனத்தின் ஒரே குறியாகக் கொண்டு பாங்குடனே இவ்விழாவை அமைக்க பல நண்பர்கள் - பல வாரங்களாக பாடுபட்டு வருகின்றனர்.
''ஊதியம் இருக்குமெனில் பரவாயில்லை'', உழைப்பு ஒன்றுதான் உண்டு. பலன் கருதாதே! என்பது அறிந்தும் தம் உழைப்பை நல்கும் பல நண்பர்களுக்கு - தமிழ் நண்பர்களுக்கு. நம் தமிழர் ஒவ்வொருவரும் நன்றி கூறக்கடமைப் பட்டுள்ளோம்.
எப்படி நம் நன்றியைக் கூறப் போகிறோம்?'' இம்மண்ணில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தாலும் ''நம் தமிழ், நாம் தமிழர்'' என்ற உணர்வு பொங்கிவர, ஒன்றாகத் திரள்வோம்! நமக்கென்று பல இடர்பாடுகள் இருக்கலாம்! அவையாவும் அன்றாட வாழ்வின் - நடப்புக்கள்! அவை மாறும். அம்மாற்றம் ஏற்பட நம்மிடையே நற்கருவிகளும், நல்லறிவும் உள்ளன. ஆண்டு ஒருமுறையே தான் அமையும் இவ்விழாவிற்கென இடர்பாடுகளை சற்று ஒதுக்கி வைப்போம். ஒன்று சேர்வோம்! இன்னும் நாட்கள் சிலவே உள்ளன!. ''நாம் விழாவிற்கு பதிவு செய்வோம்'' - ''அதுவே நமக்கு உள்ள பலமென்று உலகறியச் செய்வோம்'' தம் உழைப்பை நல்கும் அந்த நல்ல உள்ளங்களுக்கு ஆர்வம் சேர்ப்போம்.
விழாவிலே!... உங்களுக்குத் தெரியும். ''தமிழர் பண்பாடு அமையும்! . பேறிவாளர்கள் உரை உண்டு, (பேராசிரியர்கள் மதிவாணன், இரா.மோகன், கலியப்பெருமாள், வேல்நம்பி, சிவதம்பி, பெரும்பேச்சாளர் வைகோ உண்டு!) கலைப்பண்பாட்டு நிகழ்வுகள் உண்டு (காலமெல்லாம் புகழ் சொல்லும் 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகமுண்டு, தமிழர் நற்புகா கூறிடும் 'இராசஇராசசோழன்' நாடகமுண்டு. நம்பிக்கை பரப்பும் 'வழுதியூர் .சை உண்டு) திரையுலகின் வைரமாகத் திகழ்ந்த, திகழும் திரையிசை வல்லுநர்கள் உண்டு. (பி.சுசிலா உண்டு, டி.எம்.செளந்தரராஜன் உண்டு. இவரோடு பிணையும் புதிய பின்னடிண பாடகர்கள் உண்டு - அற்புதமான 'அக்னி' இசைக்குழுவும் உண்டு) |
|
அறிவார்ந்த நிகழ்வுகள் பலவும் உண்டு. (தமிழ் இளையோர், NTYO, தொடர் மருத்துவக் கல்வி - தொழிலதிபர் கருத்தரங்கம் , சிறார்க்கு திருக்குறள் போட்டியும் உண்டு) மனமுவந்து மட்டற்ற மகிழ்வு தரும் ஓவியமும் உண்டு.
மனம் கொண்டு பார்க்க, நல்லதொரு பயணம் மேற்கொள்வீர்... சீகாகோ நகர் நோக்கி! வரவேற்கக் காத்துள்ளன... வளமான உள்ளங்கள் பல!
விவரம் வேண்டுமா?
www.fetna.org
இணையத்துடன் உறவு கொள்வீர்! |
|
|
More
தமிழ் இணையம் 2002 காசு மேல காசு - தமிழ் நகைச்சுவை நாடகம்
|
|
|
|
|
|
|