Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தமிழ் இணைய மாநாடு 2002
- |ஜூன் 2002|
Share:
Click Here Enlargeதமிழ் இணைய மாநாடுகள் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தினால் (உத்தமம்) ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர நிகழ்ச்சியாகும். உத்தமம், உலகெங்கும் உள்ள 75 மில்லியன் தமிழர்களுக்காகத் தமிழ் சார்ந்த கணினித்துறை முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. இவ்வருடம், தமிழ் இணைய மாநாடு (தமிழ் இணையம் 2002) அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் எதிர்வரும் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது. இம் மாநாட்டை உத்தமம் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பிரிவுடன் இணைந்து நடத்தவிருக்கிறது. இது குறித்த விவரங்களை www.infitt.org என்ற இணையத்தளத்தின்வழி தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் இணையம் 2002, முன்பு எதிர்பார்த்ததைவிட ஒரு மாதகாலம் தாமதமாக செப்டெம்பரில் நடைபெற உள்ளதால், ஒருபக்கக் கட்டுரைச் சுருக்கத்தை ஒப்படைப்பதற்கான இறுதி நாள் 15 ஜூன் 2002க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுரைச் சுருக்கம் மின்னஞ்சல் (kalyan@softhome.net) வழியாக மாநாட்டு நிகழ்ச்சி நிரல் குழுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் எழுத்தாளர்கள் ஜூன் 30, 2002க்குள் தெரிவிக்கப்படுவார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட படைப்புகளின் மின் பதிப்புகள் 30 ஜூலை 2002க்குள் வந்தடைய வேண்டும்.

கீழ்க்காண்பவை தமிழ் இணையம் 2002ல் படைக்கப்படக்கூடிய தலைப்புகளாவன:

1.தொழில்நுட்பம்

பல்வேறு மேடைகளில் தமிழ் செய்முறைப்படுத்தல்: விண்டோஸ் 2000, யூனிக்ஸ்/லைனக்ஸ், யூனிகோட், மேக் அமைப்பு, பாம் அமைப்பு, ஜாவா

தேடல் பொறிகள், பனுவல் நிலை மாற்றி, மொழிபெயர்ப்பு நிரல், குறுக்கு மேடை தரவுப் பாய்வுக்கான பயனுறுத்தச் செய்நிரல் இடைமுகம்

ஒளிவழி எழுத்துரு கண்டறிதல், குரல் கண்டறிதல், பேச்சு உருவாக்கம், இயற்கை மொழி செயற்படுத்தல்...

இணையம் சார்ந்த எழுத்துப் பிழை திருத்தி, அகராதிக்கான ஜாவா, பெர்ல் - எழுத்துரு அடிப்படையிலான கருவிகள்,... (இணையத்தில் தமிழின் ஊடாடு பயன்பாடு)

சொல் செயற்படுத்தல், தரவுத்தளங்களுக்கான மென்பொருட்கள்...

2. மின் கருவூலங்கள்/ தகவல் சாதனங்கள்

தமிழ் இலக்கியப் படைப்புகளின் இலக்கமுறை சேகரிப்பு, கற்பித்தல் கருவிகள் (இணையவழி புத்தகங்கள், வட்டுகள், ஒலிநாடாக்கள்,...) இணையம் சார்ந்த தமிழ் அகராதிகள், சொற்களஞ்சியம், பொருள் விளக்கங்கள், ... இயந்திர மொழிபெயர்ப்பு

3. தமிழுக்கான திறவெளித் தொழில்நுட்பம்

4. தகவல் தொழில்நுட்ப இடைவௌ¤யைப் போக்கும் திட்டங்கள் தமிழுக்கான இணையம் சார்ந்த முயற்சிகள்: தமிழ் மெய்நிகர்¢ பல்கலை, மரபுத் திட்டம், ... மலேசிய சமூக மையம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், வட்டார அமைப்புகள்.

5. இணையம் மற்றும் பன்னூடக அடிப்படை யிலான கற்றல், கற்பித்தல் தொலைதூரக் கல்விக்காக பன்னூடக அடிப்படையிலான தமிழ்க் கல்விக் கருவிகள் இணையம் சார்ந்த தமிழ்க் கல்வித் தளங்கள் மற்றும் தொடர்புடைய கருவிகள் கணினி உதவியுடன் தமிழ் கற்பித்தல், மெய்நிகர் வகுப்பறை,...

6. மின் வர்த்தகம், மின் அரசாட்சி தமிழ் இணைய நுழைவாயில் தளங்கள் தமிழ் இணையத்தளப் பெயர்ப் பதிவு உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்காக மின் வர்த்தகம் (இணையம் சார்ந்த புத்தகக் கடைகள், இசைக் கருவிகள்/வட்டுகள், கற்பித்தல் கருவிகள்,...)
தமிழ் வர்த்தகத்திற்கான மென் பொருட்கள் (விற்பனை, நிதி மேலாண்மை, கிடங்கு, விரைவாக அனுப்புதல், வேண்டுதல்களின் விவரமறிதல்,...)

தமிழ் இணையம் 2002 கட்டுரை எழுத்தாளர்களுக்கான குறிப்பு

மாநாட்டு நிகழ்ச்சிநிரல் குழு, தகுதி பெற்ற படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில், அன்பு கூர்ந்து ஒன்று அல்லது இரண்டு A4 அளவிலான தாளில் உங்களது படைப்புகளின் சுருக்கத்தை 15 ஜூன் 2002க்குள் அனுப்புமாறு வேண்டுகிறோம்.

இவை ஆங்கிலம், தமிழ் அல்லது இரண்டும் கலந்த முறையில் இருக்கலாம். கடந்த மாநாடுகளில் க டைபிடிக்கப்பட்டவாறு, எல்லா படைப்புகளும் மின்னியல் வடிவில் இருக்க வேண்டும். தமிழிலோ அல்லது இருமொழிகளில் உள்ள கட்டுரைகளுக்கு அன்பு கூர்ந்து தாப் (TAB) அல்லது தகுதரம் (TSCII 1.7 version) குறியீடுகளைப் பயன்படுத்தவும்.

உங்களது படைப்புகளின் சுருக்கத்தோடு, உங்கள் முழுப்பெயர், தொழில், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டுகிறோம்.

குழுவினரால் பரிசீலிக்கப்பட்டவுடன் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படும். மாநாட்டின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தை ஒட்டிக் குறிப் பிட்ட அளவிலான கட்டுரைகள் வாய்மொழி படைப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் எழுத் தாளர்கள் 30 ஜூன் 2002க்குள் தெரிவிக்கப் படுவார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட படைப்புகளின் மின் பதிப்புகள் 30 ஜூலை 2002க்குள் வந்தடைய வேண்டும்

எதிர்வரும் தமிழ் இணையம் 2002 க்கு உங்களது மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Share: 




© Copyright 2020 Tamilonline