Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2003 Issue
ஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
Tamil Speaking Dog
லே ஆஃப்
- ரம்யா|பிப்ரவரி 2003|
Share:
சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை சானோசே போகவேண்டும். மதியம், சாப்பாட்டிற் காக வீட்டிற்கு வரவா முடியும்? வந்தால்தான் மனைவி இருக்கிறாளா சூடான சமையல் எதிர்பார்க்க? அவளும் தான் ஒரு பிரபலமான கம்பெனியில் வேலை பார்க்கிறாளே! கார் பூல் இருப்பதால் சவுகரியம். ஆனால் இவள் சீக்கிரம் எழுந்தால் தானே!

"என்ன லாவூ, எழுந்து ரெடியாகு. எப்படியும் காரில் கொஞ்சம் தூங்கப்போற. பாக்கி வெய்", என்றான் சதீஷ். "என்ன கிண்டலா? ராத்திரி சமையல் செய்து, பாத்திரம் தேய்த்து வேறு வேலைகளையும் செய்வது யார்", என்றாள் பதிலுக்கு. "இதெல்லாம் சரி. 11:30 வரை யார் டி.வி யில் சினிமா பாக்கசொல்றா", என்றான் சதீஷ். "ஆமாம், அந்த ராம்போ சினிமா எப்படி இருந்துது தெரியுமா. ஆப்கானிஸ்தானியர்கள் என்ன கலர். பாலைவனங்கள் எப்படி இருந்துது தெரியுமா", என்றாள்.

லாவண்யா சதீஷ் இவர்கள் சென்னையில் படித்த நாட்களை கார் ஒட்டிக்கொண்டே நினைத்துப் பார்த்தான் சதீஷ். கருமாரியம்மன் கோவில் அருகில் உள்ளது பெண்கள் பொறியியல் கல்லூரி. அதன் அருகே உள்ளது ஒரு ஆண்கள் கல்லூரி. இரண்டு கல்லூரிகளிலும் உள்ள சீனியரும் ஜுனியருமாக பத்து பேர் நண்பர்களாய் இருந்தனர். படிப்பைப்பற்றியே பெரும்பாலும் பேசுபவர்கள். எப்போதாவது ஒட்டல், சினிமா என்றும் போவார்கள். யாரும் வரம்பு மீறியது இல்லை. ஒருவருக்கொருவர் நல்ல ஸ்னேஹம். எப்பேர்ப்பட்ட நட்பு அது. ஒரு தடவை அந்த கும்பலில் உள்ள மல்லிகா பரீட்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து, அதை வெளியே கூறாமல் இருந்ததை எப்படிக்கண்டித்தனர். அவளது செலவு எல்லாவற் றையும் நண்பர்கள் பங்குகொண்டனர். நட்பிற்கு இணை எதுவும் இல்லைதான்.

"சதீஷ், ஜாக்கிரதை. முன்னாடி ஒருவன் மிகவும் மெதுவாக போகிறான். பார்த்து", என்றாள் லாவண்யா. "சதீஷ், இன்று எங்கள் கம்பெனியில் கொஞ்சம் பேருக்கு லே ஆஃப்", என்றாள். அதை கேட்ட சதீஷ், "தினம் தினம் இதைக்கேட்டு மனது கஷ்டப்படுகிறது", என்றான். "உனக்கு தெரியுமா? விஷால், ஒஹையோ யூனிவர்சிடியில் மாஸ்டர்ஸ் படித்தானே, நேற்றைய தினம் லே ஆஃப் செய்த லிஸ்டில் இவன் பேரும் உண்டு", என்றான். "போனவாரம் என் நண்பன் ஏ.எம்.டியில் வேலை பார்த்தவன் லே ஆஃப் ஆகி விட்டான். அனேகமாக எல்லா கம்பெனியிலும் கடந்த மூன்று குவாட்டராக லாஸ்தான்", என்றான். "இப்படி நிலமை மோஸமாக இருக்கிறதே", என்றாள் லாவண்யா.

"எப்படியோ சதீஷ் நம்ம ரெண்டு பேரும் சம்பாதிப் பதால் பரவாயில்லை. ஒருத்தர் சம்பாதியத்தில் மனைவி, குழந்தையை வெச்சுண்டு எப்படி சமாளிப் பார்கள்? பே ஏரியாவில் அப்பார்ட்மெண்ட் வாடகை அதிகமா இருக்கே! பேச்சிலர்ஸ் ரெண்டு பேர், மூணு பேர் ஒண்ணா இருக்கா, அவா சமாளிச்சுப்பா", என்றாள். இதைக்கேட்ட சதீஷ், "ஆமாம்! எல்லாருக் கும் அமெரிக்காவில் வேலை கிடைக்கணும்னு ஆசை. ஒரு MS வாங்கிடறா. வேலையும் கிடைச்சாச் சுன்னு நிம்மதியா இருந்திருப்பா. இப்படி ஆகும்னு நினச்சிருக்கமாட்டானு சொன்னான்".

"என்ன லாவூ. நாம இண்டியா போயிடலாமா? நம்ம கம்பனியிலும் இதுமாதிரி வரும்போலயிருக்கே. நேத்துக்கூட சீக்ரட் மீட்டிங் சீ. இ. ஓ வித் டைரெக்டர் நடந்தது", என்றான். "ஆமாம் சதீஷ். அஞ்சு வருடமா இருக்கோம், கிரீன் கார்ட் வர நேரம். முதல்ல சென்னைல கார் ஓட்ட முடியுமா? முன்னாடி ஸ்கூட்டர் இடது பக்கதுல ஆட்டோ, பின்னாடி மாநகரபேருந்து, வலது பக்கதுல கவர்ன்மெண்ட் ஜீப், கார்ல ஏசி இல்லைனா பெட்ரோல் புகை நாற்றம் தாங்காது. டிராபிக் ஜாம் வேறு. எனக்கு வேண்டாம்பா", என்றாள்.

"ஏன் லாவூ, இதயெல்லாம் தாண்டி நம் அப்பா, அம்மா, தம்பி, தங்கை இருக்கிறார்களே. அது தெரியலையா உனக்கு", என்றான் சதீஷ். "ஏன் சதீஷ். நான் அவர்களை நினைக்கலைன்னு சொல்றியா? நாம மிடில் கிளாஸ், பணம் எவ்வளவு முக்கியமா இருக்கு, தம்பி தங்கை படிப்புக்கு, கல்யாணத்துக்குன்னு நம்ம பணம் எவ்வளவு உபயோகமா இருக்கு. ஏதோ கவர்ன்மெண்ட் உத்தியோகம்.

பென்ஷன் வரும். அதையும் கம்யூட் பென்ஷன் குறையும். அதுல எப்படி சதீஷ் நம்ம சின்னதுகள் முன்னுக்குவரமுடியும்னு நம்ம அப்பா கவலைப்பட்டு இருப்பா. நம்ம தம்பிகள் எம்.எஸ் படிக்கவேண்டாமா? நான் எம்.எஸ் போகலை. என் தம்பி கட்டாய மாகப்போகணும். யூ.எஸ்ல எம்.எஸ் படிக்க என் அம்மா விடல. சரி சதீஷ், என்னை டிராப் பண்ணிட்டு காரை நீ வச்சுக்கோன்னு லாவண்யா சொல்லிவிட்டு இறங்கினாள்.

சதீஷ் யோசித்தான். இந்த யூ.எஸ் மோகம் எல்லாரையும் பிடித்து ஆட்டுவதைப்போல் என்னையும் ஆட்டியது உண்மைதான். ஐந்து வருடம் சம்பாதித்து விட்டோம். ப்ளாரிடா, ஈஸ்ட் கோஸ்ட் என சுற்றி விட்டோம். லாஸ்வேகஸ், கிராண்ட் கேனியன் பாத்தாச்சு. கல்யணம் ஆன புதுசுல பார்த்த நயாகரா டிஸ்னிலாண்ட் போதும். இன்னும் ஏன் அமெரிக்கா வாழ்க்கை. நம் அம்மா கையால சமைச்ச வத்த குழம்பு, கருவடம், வெங்காய சாம்பார், பிட்லே, அவியல் எல்லாம் சாப்பிட்டு எவ்வளவோ நாளாச்சு. அம்மாவும் அப்பாவும், இங்க வரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டா. தம்பி தங்கைகளை விட்டு விட்டு எப்படி வருவா? அதுவும் நியாயம் தானே. லாவண்யாதான் பிடிவாதம் பண்ணா. நான் எம்.எஸ் பண்ணின அப்புறம் திரும்பிடலாம்னுதான் நெனச்சேன். லாவண்யாவால தான் "பே ஏரியாக்கு" வந்தோம். லாவண்யா பீ. யீ ஸீ.எஸ் முடிச்சிட்டு சென்னையிலுள்ள ஒரு கம்பனி மூலமாக நேரா பே ஏரியாக்கு வந்துட்டா. என்னை பே ஏரியாக்கு MS முடிச்சதும் வரச்சொன்னதால இங்க இருக்கற கம்பனிக்கு நான் அப்ளை பண்ணினேன். இதெல்லாம் யோசித்துக்கொண்டே ஆபீஸ் பில்டிங்கை தாண்டிப்போய்விட்டான். வேர வழி இல்ல. யூ டர்ன் தான்னு நினைத்தான்.

மத்தியானம், லன்ச் டைம்ல நண்பன் ரமேஷ் கிட்ட சதீஷ் "டேய், என் அம்மாக்கு மூட்டுவலியாம். சரியா நடக்க முடியலைன்னு தங்கை மெயில் அனுப்பினா. தங்கை வேற காலேஜ் போறா. தம்பி +2. எப்படி படிக்கிறானோ? கொஞ்சம் பொருப்பா இருக்க ணுமே. கிரிகெட் பேட்டோட சண்டே அலைவானே! +2 கோச்சிங் க்ளாஸ் போறான், ஆனால் அதிலேயும் படிக்கணுமே! அப்பாக்கு ரிடைர் ஆக ஒரு வருஷம் இருக்கு. தங்கை மீனா அடுத்த வருஷம் எம்.காம் முடிச்சுடுவா" ன்னு புலம்பினான்.

இன்னொரு நண்பன் வந்தான் "என்ன சதீஷ். விஷயம் கேட்டியா? நம்ம கம்பெனியில இன்னும் இரண்டு நாள்ல லே ஆஃப் பத்தி தெரியுமாம். யார் யார் பெயர் இருக்கோ? தெரியலை! உன் பாடு ஜாலி. பெண்டாட்டியும் சம்பாதிக்கறா. எனக்கு "கதி கலங்கரது டா" என்றான். இதை கேட்டு விட்டு தன்னுடைய சீ£ட்டுக்கு போன சதீஷ் கண்ணை மூடிக்கொண்டு முருகனை வேண்டிக்கொண்டான் "முருகா, எனக்கும் லாவண்யாவுக்கும் லே ஆஃப் வந்தா தேவலை. ஒரு வழியா ஊருக்குப்போயிடலாம். அம்மா கையால சாப்பிடலாம். சுதா குட்டியோட விளையாடலாம். அம்மாவுக்கு கால் வலிக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அப்பாக்கு வெற்றிலையை அம்மாவுக்கு தெரியாமல் வாங்கிக்கொடுக்கலாம். கமெண்ட் அடிச்சுண்டே டி.வீ சீரியல் பாக்கலாம். இந்த ஜாலி வருமா?".

யூ.யெஸ்ல சம்பாதித்து நங்கநல்லூர்ல வீடு வாங்கியாச்சு. தங்கை மீனா கல்யாணத்துக்கு பணம் சேர்த்தாச்சு. அப்பா ரிடையர் ஆனா பணம் அப்பாக்குதான். அவா ஜாலியா சிலவழிக்கணும். ஷேத்ராடணம் போகட்டும். நாம கார்ல கோவில் குளம்னு அழைச்சிண்டு போகணும் இப்படி நினச் சிண்டு இருக்கும்போதே, டைரெக்டர், சதீஷ்ன்னு சொன்னது காதுல விழுந்தது. முருகா. எனக்கு தலை சுத்தறது, லே ஆப் கொடுத்துடுன்னு வேண்டிண்டான். சிறிது நேரம் கழித்து டைரெக்டர் ரூமிலிருந்து வெளியே வந்த சதீஷை எல்லோரும் பார்த்தார்கள். அவன் டைரெக்டரை வேலையால் கவர்ந்தவன். அவனுக்கு யார் யார் லே ஆஃப் எனத்தெரியும் என சூழ்ந்து கொண்டனர். "இப்ப எதுவும் இல்லைப்பா", ன்னு சொல்லி, "சரி. நாம எல்லாரும் இப்ப வெளில போறோம். எங்க தெரியுமா? நேர கோமள விலாஸ் போறோம்", ன்னு சொல்லி சீ£ட்டை விட்டு எழுந்தான். சதீஷ¤க்கு கோமள விலாஸ் மேல ஒரு மோகம். இரண்டு தடவை அங்கே சாப்பிடும்போது ஸெல் போன்ல நல்ல செய்தி கெடச்சுதாம்.

என்ன அண்ணா புதிர்! எதுக்கு போறோம்னு சீனு கேட்டான். சீனு ரொம்ப நல்ல பையன், அவனை சதீஷ¤க்கு ரொம்ப பிடிக்கும். பொறுப்பான பையன், எல்லாரைவிட வயதில் சிறியவன். தாத்தா பாட்டிக்கு மாதா மாதம் பணம் அனுப்பறான். தனியா ஒரு போர்ஷன்ல மயிலாப்பூரில இருக்கா. மத்த போர்ஷன்காரா கவனிச்சுகறா, தாத்தா பாட்டிகிட்ட வளர்ந்தவன். அப்பா அம்மா

இல்லாம எப்பிடி எப்பிடியோ வளர்ந்து ஒரு வழியா பி.ஈ முடிச்சான். வெவ்வேறு சொந்தக்காராகிட்ட வெவ்வேறு நேரத்துல பேச்சுக்கள கேட்டு வளர்ந் தவன். இங்க இருக்கறவாதான் அவனை பொறுப் புள்ள நல்ல மனுஷனா மாத்திருக்கா. கிராமத்துப் பேச்சோட, வெகுளியா கொஞ்சம் கோமாளியா இருந்தான். ஆனா கொடுத்த வேலையை 100% பிரமாதமா செஞ்சிடுவான். மூளை அபாரம்.

அண்ணா, சொல்லு அண்ணா, என்ன விஷேஷம்னு சீனு கேட்டான். "எங்க சுதா குட்டிக்கு இன்னிக்கி பிறந்த நாள்" ன்னு சதீஷ் சொன்னான். ஹைய்ன்னு கத்திண்டு, நாலு நாலு பேரா கார்ல கோமள விலாசுக்கு போனார்கள். உன் பத்தினிக்கு சொல்லி யாச்சா? இல்லைன்னா மன்னிகிட்ட மாட்டிக்கப் போறேன்னு ஸ்வாமி சொன்னப்புறம்தான் தான், எதோ நியாபகமாய் இருந்துவிட்டோம்ன்னு தோணியது, உடனே லாவண்யாக்கு போன் பேசி ஹோட்டலுக்கு வரச்சொன்னான் சதீஷ்.

லாவண்யா முகத்தில சோகம் கலந்த ஒரு மகிழ்ச்சி இருந்ததை சதீஷ் கண்டுபிடித்துவிட்டான். தனியா பேசிக்கலாம்னு இருந்துவிட்டான். ஒரு வழியா நண்பர்கள் காரில் பறந்ததும், "என்ன லாவண்யா, ஒரு மாதிரி இருக்கே", ன்னு கேட்டான். "சதீஷ், நாம இந்தியாக்கு போய்விடலாம். எனக்கு லே ஆஃப் நோட்டீஸ் கொடுக்கச்சொல்லிட்டேன் என் மேனேஜரிடம்", என்றாள். "என்னது நீ கொடுக்கச்சொல்லிட்டியா? "....... உலக மகா அதிசியம் மாதிரி இருக்கேன்னான் சதீஷ்.

"ஆமாம் சதீஷ். என் க்ரூப்புல மொத்தம் 10 பேருக்கு லே ஆஃப். ஆபிஸ்ல மொத்தம் 50 பேர். 15 பேர் உள்ள எங்க க்ரூப்புல 5 பேர் தப்பிச்சோம். ஆனா அந்த 10 பேர்ல சுசீலா ஒருத்தி. அவ கிட்ட மட்டும் தெரியாம நான் கேட்டேன், "உனக்கு லே ஆஃப் வந்தா சமாளிப்பியா? அடுத்த வாரம் லிஸ்டு வரும் போல இருக்கே. இன்னிக்கு வெள்ளிக்கிழமை, திங்கள் வந்திடும்போல கேன்னேன்". அவள் அழுத அழுகை என்னால் தாங்கமுடியலை சதீஷ்! அவள் தம்பிக்கு கோச்சிங் க்ளாஸ் பணம், அக்கா குழந்தைகள் படிப்பு, உனக்கு தான் தெரியுமே, அவள் அத்திம்பேர் கார் ஆக்சிடென்ட்ல போனது, அப்பாவோட ஹார்ட் ஆபரேஷன் தேதி பிக்ஸ் பண்ணியாச்சாம் எம்.எம்.எம் ல, அம்மா நிரந்தர பீ.பீ பேஷண்ட், எப்பவும் மருந்து. இதோட ஆர்த்ரைடிஸ் வேற வந்துடுத்தாம். பாட்டி இருக்கறதுனால எல்லாம் பாட்டி சமாளிக்கறா.

"லாவண்யா, நான் வேண்டாத தெய்வமில்லை. எனக்கு லே ஆஃப் வரக்கூடாது. ராத்திரி 9:30 வரைக்கும் ஆபீஸ்ல வேலை பண்ணறேன் தெரியுமா? சீனியர் மேனேஜருக்கும் தெரியும். 8:30க்கு கார்த்தால போறேன் தெரியுமா? உன் வாயால நல்ல வார்த்தை சொல்லு லாவண்யா. தனியா இங்கு வாடகை சாப்பாடுன்னு எப்படி, எப்படி நான்... என்னை நம்பி ஏழு ஜீவன் அங்கன்னு

என்னை பிடிச்சிண்டு அழுதா. நான் தான் சமாதானம் சொன்னேன், "இதோ பார். இது வேறு ஊர். வேறு தேசம். இங்கே கிடச்ச வரை பகவான் ஆசி என்றேன். சதீஷ், உன் விருப்பத்தையும் நான் இரண்டு வருஷமா தீர்த்து வைக்கலை. இந்த பெண்ணின் கண்ணீர் என் மனசை மாத்திடுத்து", என்றாள் லாவண்யா.
மேனேஜரிடம் பேசினேன். சார் எனக்கு நீங்கள் கட்டாயம் உதவி செய்யணும். நீங்களும் நானும் சென்னையில் ஒரே அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் குடியிருந்தோம். ஒரே பள்ளியில் படித்தோம். காலேஜ்தான் வேற. இங்க வந்தா என்னை இண்டர்வூ பண்ணது நீங்க. இந்த பந்தத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். அதுக்கு நீங்க ஒத்தாசை பண்ணனும். 10 பேர்ல சுசீலா பேரை எடுத்துட்டு என் பேர் போடுங்கோ ப்ளீஸ். உங்களுக்கே தெரியும், எங்க சுதா குட்டியை சென்னையில் விட்டுட்டுதான் நாங்க இருக்கோம். என் மனசுல முருகன்தான் புகுந்து நல்ல புத்தி குடுத்திருக்கான். அந்தப்பெண்குடும்பம் இப்போ மோசமா இருக்கு, எனக்கு கட்டாயம் இந்த உதவி பண்ணனும்.

என்ன லாவண்யா, நாம ஒண்ணா படிச்சு வளர்ந் தோம். ஒரு நல்ல பேமிலி ப்ரெண்ட். இதுகூட செய்யலைனா எப்படி. ஸீனியர் மேனேஜரிடம் சொல்லி வருகிறேன் என்று சொன்னார். "சதீஷ், நீ போன் பண்ணின போது அங்க போயிருந்தேன். மெசேஜ் கிடைச்சதும் வந்தேன். என் மனசு நிம்மதி யாக இருக்கு சதீஷ்", ன்னு சொன்னா லாவண்யா.

சரி லாவண்யா, உன் மனசை முருகர்தான் மாத்திருக்கார். ஊருக்கு டிக்கட் புக் பண்ணவா என்றான். கான்கார்ட் முருகனுக்கு அர்ச்சனை பண்ணறேன் என்றும் சொன்னான்.

டிக்கட் புக் பண்ணியவுடன் ஆபீஸில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பறநேரம், சீனு, "அண்ணா, நீங்கள் நிஜமான அண்ணா, நோ, நோ, ப்ரெண்ட் நோ நோ தெய்வம்" ன்னு சொன்னான். அழுதான். வார்த்தை வரவில்லை. "பேசக்கூடாது! எதுவும்" என்றான் சதீஷ். சீனுவை கட்டி அணைத்துக் கொண்டான்.

அந்த தேதியும் வந்துவிட்டது. எஸ். எப். ஓ இண்டர்னேஷனல் ஏர்போர்ட். நண்பர்கள் பூச் செண்டுடன் வந்தார்கள். டைரெக்டரும் வந்ததைப் பார்த்து லாவண்யா அசந்து போனாள். சீனியர் மேனேஜர் வருவதே அதிசயம். இங்கே இவர் வந்து கைகொடுத்தார், பெஸ்ட் ஆப் லக் என்றார். சீனு அழுதான். "அழாதே. சீனு, நீ என்னிக்கும் என் தம்பிதான்" என்றான் சதீஷ். "கிளம்புங்கள். செக்யூரிடி செக்ல பெரிய க்யூ" என்று விடை குடுத்தனர் நண்பர்கள். சதீஷின் மனது நிறைந்து இருந்தது. லாவண்யா, சென்னையில் ஒரு ப்ரான்ச் ஆபீஸ் ஆரம்பிக்கற பாஸிபிலிடி பார்க்கவும் ஒரு ஆபீஸ் ஆரம்பிக்கவும், இதனை கொஞ்ச நாள் ஸீக்ரெட் ஆக வைத்துக்கொள்ளனும்னும் டைரெக்டர் சொல்லி யிருக்கார். என் ஆபீஸ்ல சீனுக்கு லே ஆஃப் வந்தது. என்னால் தாங்க முடியவில்லை. வெரும் பீ.ஈ வுடன் சென்னை சென்றால் அவன் திண்டாடுவான். ஒரு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் போதாது. நான் வேலையை விடப்போகிறேன் என்று பிடிவாதமாகப் பேசினேன். "உன்னை மாதிரி ஒருத்தனை இழக்கச்சம்மதமில்லை. ஆனால் ஒன்று, சென்னையில் ஒரு ஆபீஸ் ஆரம்பிக்க ஆறு மாதமாய் நினைக்கிறேன், போகமுடியவில்லை. அந்த வேலைதான் உனக்குத் தரப்போகிறேன். இது ரகசியமாக இருக்கட்டும். இப்போது லே ஆஃப் நேரம். இது
தெரியவேண்டாம். நீ சென்னை ஆபீசுக்கு மேனேஜர் என்ற ஆர்டருடன் தான் உன் ராஜினாமா வை ஏற்பேன். சரியா?", என்றார். "அப்படி என்றால், நானும் ஒன்று கேட்பேன்.

சீனுவின் பெயரை லே ஆஃப் லிஸ்ட்டிலிருந்து எடுக்கணும். நல்ல சின்சியர். சென்னை ஆபீஸ¤க்கு எனக்கு தேவையெனில் அவனை அனுப்புங்கள், இப்போது வேண்டாம். அவன் ஒரு நல்ல இளைஞனாக உருவாகணும். சிறிய வயதில் நிறைய அடிபட்டிருக்கான். இப்போதான் அவனை நமது நண்பர்கள் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அவனுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். அவனை ஆதரிக்க நம்மை விட்டா யாருமில்லை", என்று கெஞ்சினான் சதீஷ். இதைக்கேட்ட டைரெக்டர் சரி, அப்படீன்னா எல்லோர்மாதிரி அவனுக்கும் பே கட் உண்டு. உனக்குதான் தெரியுமே; சீ.ஈ.ஓ, எனக்கு, சீனியர் மேனேசர், மேனேசர் எல்லாருக்கும் 20% கட்டும், மற்றவர்களுக்கு 10% கட்டும் முடிவு பண்ணியிருக்கோமே என்றார்", என்று கூறினான் சதீஷ் லாவண்யாவிடம்.

"என்ன சதீஷ், பெரிய ஆளு நீங்க! ஒரு கல்லுல ரெண்டு மாங்கா, இல்லை மூணு மாங்கா. உங்க ராஜினாமா, சென்னை வேலை, சீனு வேலை என்றாள் லாவண்யா.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அழகிகளுடன் வரவேற்றது. என்ன லாவண்யா, இந்த சிங்கப்பூர் விமானப்பணிப்பெண்கள் எத்தனை அழகு, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு என்றான் சதீஷ். என்ன எப்படி இருக்கு உடம்பு என்றாள். எல்லாரும் ஸீட் பெல்ட் போட்டுக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு தொடங்கியதும், "முருகா, முருகா, நல்லபடியாய் சென்னையில் இறங்க உதவி செய்" என்று கூறி, நிம்மதியான பெருமூச்சை சதீஷ் விட்டான்.

"ஏன் சதீஷ். சுதா குட்டிக்கு கிப்ட் எதுவும் வாங்கலியே! அவசரத்துல", என்றாள் லாவண்யா. கவலைப்படாதே, சுதா குட்டிக்கு ஒரு நல்ல கிப்ட் தந்துடலாம், அதாவது சுதா குட்டிக்கு ஒரு தம்பி பாப்பாவை குடுத்துடலாம்" என்றான், கண்ணைச் சிமிட்டிக்கொண்டே.

விமானம் ஓடுபாதையில் ஓட ஆரம்பித்து உயரப் பறக்கத்தொடங்கியது. "முருகா. முருகா", என்று சொல்லிக்கொண்டே கண்ணை மூடிக்கொண்டு கந்தர் சஷ்டிக் கவசம் சொல்ல ஆரம்பித்தனர், இருவரும்.

ரம்யா
More

Tamil Speaking Dog
Share: 




© Copyright 2020 Tamilonline