1. இதென்ன அபத்தமான கேள்வி, இது இந்தியாவில் உபயோகப் படுத்தும் பணம் அல்லவா என்று கேட்காதீர்கள். பார்படாசைச் சேர்ந்த ருபீ என்ற இசைக் கலைஞர், ஜமைக்காவில் பிறந்த ஷாகி (Shaggy) மற்றும் ட்ரினிடாடில் பிறந்த ·பெயே-ஆன் லியான்ஸ் (Faye-Ann Lyons) என்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து “The Game of Love and Unity” என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். இது இந்த வருட உலகக் கோப்பையின் பாடலாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. உலகக் கோப்பை இணையதளத்தில் (
http://cricketworldcup.indya.com/event/officialsong.htm) இந்த இசைக் கலைஞர்களைப் பற்றிய விவரங்களை அறிவதோடு, இந்தப் பாடலையும் கேட்கலாம்.
2. தவறு. 1987-க்குப் பின் அடுத்த உலகக் கோப்பை 1992-லும், 1996-க்குப் பின் அடுத்த உலகக் கோப்பை 1999-லும் நடைபெற்றன. இதுவரை உலகக்கோப்பை நடைபெற்ற வருடங்கள்: 1975, 1979, 1983, 1987, 1992, 1996, 1999, மற்றும் 2003.
3. இந்த அணிகள் இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பையை இழந்தன. இங்கிலாந்து 1979-ல் வெஸ்ட் இண்டீஸிடமும், 1987-ல் ஆஸ்திரேலியா விடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்றது. இங்கிலாந்து மூன்று முறை இறுதி ஆட்டம் வரை முன்னேறியும், இதுவரை ஒரு முறைகூட உலகக் கோப்பையைக் கைப்பற்றவில்லை. ஆஸ்திரேலியா 1975-ல் வெஸ்ட் இண்டீஸிடமும், 1996-ல் ஸ்ரீலங்காவிடமும் தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் 1983-ல் இந்தியாவிடம் தோற்றது. 1999-ல் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2003-ல் இந்தியா ஆஸ்திரேலியா விடம் தோற்றது.
4. பெர்முடா, அயர்லாந்து ஆகிய நாடுகள் இதுவரை உலகக் கோப்பையில் பங்கேற்றதில்லை. பெர்முடா B-பிரிவில் இந்தியாவுடனும், அயர்லாந்து D-பிரிவில் பாகிஸ்தானுடனும் போட்டியிடுகின்றன.
5. முகமது அசாருதீன் 23 ஆட்டங்களுக்கு அணித்தலைவராக இருந்து 10 ஆட்டங் களில் வெற்றியும், 12 ஆட்டங்களில் தோல்வியும், 1 ஆட்டத்தில் வெற்றி தோல்வியில்லாமல் டிராவும் பெற்றுத் தந்திருக்கிறார்.
6. வேறு யாராக இருக்க முடியும்? இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர்தான். இவர் இதுவரை பங்கேற்ற 33 உலகக் கோப்பை ஆட்டங்களில், 8 முறை இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
7. பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரம் 38 ஆட்டங்களில் பங்கேற்று 55 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
8. இரண்டு பேர் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்கள். கெப்லர் வெஸ்ஸல்ஸ் (Kepler Wessels) 1983-ல் ஆஸ்திரேலியா அணியில் விளையாடினார். பின்னர் 1992-ல் தென் ஆப்பிரிக்காவின் அணித்தலைவராக இருந்தார். கிரேம் ஹிக் (Graeme Hick) 1983-ல் ஸிம்பாப்வே அணியில் இருந்தார். ஆனால் ஓர் ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. பின்னர் 1992-ல் இருந்து இங்கிலாந்து அணியில் விளையாடினார்.
9. 2003-ல் நடந்த உலகக் கோப்பையில் கனடா, ஸ்ரீலங்காவிற்கு எதிராக 36 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது. உலகக் கோப்பையில் இதுவரை 10 முறை கனடாவையும் சேர்த்து பல அணிகள் 100 ஓட்டங்களுக்கும் குறைவாக எடுத்திருக் கின்றன. இந்தியா உலகக் கோப்பை ஆட்டங்களில் எடுத்த மிகக் குறைவான ஓட்டங்கள் 125. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2003 உலகக் கோப்பையில் இது நடந்தது.
10. 1996-ல் நடந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காரி கிர்ஸ்டன் (Gary Kirsten) யுனைடெட் அராப் எமிரேட்ஸ¤க்கு (UAE) எதிராக நடந்த போட்டியில் ஆட்டம் இழக்காமல் ஆடி 188 ஓட்டங்கள் எடுத்தார்.
11. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மதன்லால் முதல் பந்தை வீசிய பெருமையைப் பெற்றார்.
12. சௌரவ் காங்குலி மொத்தம் 16 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். 1999-ல் ஸ்ரீலங்காவிற்கு எதிராக 7 சிக்ஸர்களும், 2003-ல் கென்யாவிற்கு எதிராக 5 சிக்ஸர்களும், நமீபியாவிற்கு எதிராக 4 சிக்ஸர்களும் அடித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து 12 சிக்ஸர்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங். ஒரே ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித் திருப்பவர் பான்டிங். அவர் 2003-ல் இந்தியாவிற்கு எதிராக ஒரே ஆட்டத்தில் 8 சிக்ஸர்கள் அடித்தார்.
13. 1999-ல் ஸ்ரீலங்காவிற்கு எதிராக ராகுல் டிராவிடும், சௌரவ் காங்குலியும் இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ஓட்டங்கள் சேர்த்தனர்.
14. சேத்தன் ஷர்மா நியூசிலாந்துக்கு எதிராக 1987-ல் நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இவரையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் இதுவரை ஹாட் டிரிக் எடுத்திருக்கின்றனர். அவர்கள் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக், ஸ்ரீலங்கன் வீரர் சமீந்தா வாஸ், ஆஸ்திரேலிய வீரர் பிரன்ட் லீ.
15. சரி. பெண்கள் விளையாடும் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் பல நாடுகள் பங்கெடுத்துக் கொள்கின்றன.