கிரிக்கெட் ஜூரம்
ஒன்பதாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் துவங்குகிறது. ஆனால் அந்த ஜுரம் நமக்குப் பிடித்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆஸ்திரேலியாவைத் தோற் கடிக்க முடியும் என்று சமீபத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் நிரூபித்திருப்பது ஒரு சுவையான திருப்பம். இந்த வருடக் கோப்பை யார் கைக்கும் செல்லலாம் என்ற நிலையை அது ஏற்படுத்தி இருக்கிறது. ஆக ஜுர நிலை தாண்டி நாம் பித்துப் பிடித்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஜுரம் பிடித்தால் மருத்துவர் நாடியைப் பிடித்துப் பார்ப்பார். அது போல உங்கள் கிரிக்கெட் ஜுரத்தை இந்தக் கேள்விகள் மூலம் சோதிப்போம். இவை அனைத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் சம்பத்தப்பட்ட கேள்விகள்.

எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்களுக்கு அணியில் இடம்!

15 - நீங்கள் சதம் அடித்து விட்டீர்கள், உங்கள் பெயரை சச்சின் என்று மாற்றிக் கொள்ளலாம்;

10-15 – தொடக்கநிலை வீரர் (opening batsman);

5-10 - நடுநிலை ஆட்டக்காரர் (middle-order batsman);

5 -க்கும் கீழ் - கடைநிலை வீரர் (tail-ender);

0 - மன்னிக்கவும் நீங்கள் கிளீன் போல்ட் ஆகிவிட்டீர்கள், அணியில் இடம் இல்லை.

கேள்விகள்

1. ருபீ (Rupee) என்பது யார்?
2. உலகக் கோப்பை சரியாக 4 வருடங் களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது, சரியா, தவறா?
3. உலகக் கோப்பையில் இங்கிலாந்து மூன்று முறையும், ஆஸ்திரேலியா இரண்டு முறையும், இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஒரு முறையும் என்ன செய்தன?
4. 2007 உலகக் கோப்பையில் பங்கேற்கும் நாடுகளில் இதுவரையில் உலகக் கோப்பையில் விளையாடாத நாடுகள் எவை?
5. உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிகமான ஆட்டங்களுக்கு அணித் தலைவராக இருந்தவர் யார்?
6. உலகக் கோப்பை போட்டிகளில் அதிகமுறை ஆட்ட நாயகன் (Man of the Match) விருது பெற்றவர் யார்?
7. உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?
8. உலகக் கோப்பைகளில் இரண்டு வேறு அணிகளுக்கு விளையாடிய வீரர்கள் யார்?
9. இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் மிகக் குறைவான ஓட்டங்கள் எடுத்த அணி எது?
10. உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மிக அதிக ஓட்டங்கள் எடுத்தவர் யார்?
11. 1975-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் முதல் பந்தை வீசியவர் யார்?
12. உலகக் கோப்பை ஆட்டங்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் யார்?
13. இதுவரை நடந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் எந்த இரண்டு வீரர்கள் இணைந்து அதிகமான ஓட்டங்கள் குவித்தனர்?
14. உலகக் கோப்பை போட்டிகளில் முதன்முறையாக ஹாட் டிரிக் எடுத்தவர் - அதாவது மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த மூன்று பந்துகளில் கைப்பற்றியவர் யார்?
15. பெண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெறுகிறது - சரியா, தவறா?

விடைகள்



சேசி

© TamilOnline.com