மயிற்பீலி
Sep 2012 கோபத்தின் கடைசிப் பக்கத்தில்...
முத்த அரிசிகள் கொண்டு
நான் வளர்க்கும்
மன்னிப்பு மயிலிறகு ஒன்று மேலும்...
|
|
|
அமலால் நிறையும் ரமலான்
Aug 2012 பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் மேலும்...
|
|
களவு...
Aug 2012 பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! மேலும்...
|
|
காப்பாத்துங்க! காப்பாத்துங்க!
Jun 2012 வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்! மேலும்...
|
|
|
|
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
Nov 2011 எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை மேலும்...
|
|
ஃபேஸ்புக்கில் ஓராண்டு
Jul 2011 கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ
கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை
கற்பனை மலர்வதும் இல்லை
கனவில் வருவதும் இல்லை! மேலும்...
|
|
|
ஒருவரிக் குறளே!
Jun 2011 எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? மேலும்... (2 Comments)
|
|
ஒரு பிடி சிரிப்பு
Mar 2011 தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல மேலும்... (2 Comments)
|
|