கிரேவி மற்றும் குருமா வகைகள் கடாய் பன்னீர் காளான் கிரேவி காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew) பருப்பு குருமா தக்காளி பொட்டுக்கடலை குருமா காய்கறி குருமா
|
|
|
தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கிண்ணம் தயிர் - 1/2 கிண்ணம் கெட்டியான பால் அல்லது Half and Half - 1/2 கிண்ணம் மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி லவங்கப்பட்டைத் தூள் (cinnamon) - 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பதப்படுத்திய கீரை - 2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப பன்னீர் துண்டங்கள் - 15 |
|
செய்முறை
அடிகனமான வாணலியில் நெய் விட்டுச் சற்றுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள்,
கரம் மசாலாத் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கீரையை யும் போடவும்.
கீரை நன்றாக வெந்ததும் நன்கு மசிக்கவும். மிக்ஸியில் வேண்டு மானால் அரைத்துக்கொள்ளலாம். பின்னர் தயிர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்தபின்னர் கெட்டியான பால் அல்லது Half and
Half சேர்த்து 10 நிமிடங்கள் மெலிதான தீயில் வைத்து, பன்னீர் துண்டங்கள் சேர்த்து இறக்கவும்.
பின்குறிப்பு : நுண்ணலையில் வைக்கும் பாத்திரத்தில் பன்னீர் துண்டங்களை சிறிது தண்ணீரு டன் சேர்த்து 2 நிமிடங்கள் உயர் திறனில் (High power) வேக வைத்தால் பன்னீர் சற்றுக் கடினத்
தன்மையுடன் நன்றாக இருக்கும். இதை வெந்த தண்ணிருடன் சேர்த்துக் கொள்ளலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கிரேவி மற்றும் குருமா வகைகள் கடாய் பன்னீர் காளான் கிரேவி காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew) பருப்பு குருமா தக்காளி பொட்டுக்கடலை குருமா காய்கறி குருமா
|
|
|
|
|
|
|