|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|அக்டோபர் 2014| |
|
|
|
|
1) ஒரு வயலில் ஒவ்வொரு நான்கடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 40 அடி நீளத்திற்கு எத்தனை தூண்கள் தேவை?
2) 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ விடை 1 வரச்செய்ய வேண்டும் இயலுமா?
3) ஒரு மட்டையும் இறகுப் பந்தும் சேர்த்து விலை 110 டாலர். இறகுப் பந்தின் விலையைவிட மட்டையின் விலை 100 டாலர் அதிகம் என்றால் பந்தின் விலை என்ன?
4) ஐந்து ஒன்பதுகளைப் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ விடை 10 வரச்செய்ய வேண்டும் இயலுமா?
5) 38, 11, 74 69, 15, 78 58, ?, 76 மேற்கண்ட வரிசையில் - ? - இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1) நீளம் = 40 அடி. ஒவ்வொரு நான்கடிக்கும் ஒரு தூண்கள் என்றால் 40 / 4 = 10 + முதல் தூண் = 11 தூண்கள் தேவைப்படும்.
2) இயலும். (148 / 296) + (35 / 70) = 1
3) இறகுப் பந்து = x;
மட்டை = y
இறகுப் பந்தின் விலையைவிட மட்டையின் விலை 100 டாலர் அதிகம் என்றால் = y = x + 100
x + y = 110 x + x + 100 = 110 2x + 100 = 110 2x = 110-100 = 10 x = 5 ஆக, இறகுப் பந்தின் விலை = 5 டாலர். y = x + 100 = 5 + 100 = 105. மட்டையின் விலை 105 டாலர்.
4) இயலும்.
i) 99/9 - 9/9 = 10
ii) 9 + 99/99 = 10
5) வரிசையின் முதல் மற்றும் இறுதி எண்களைக் கூட்ட, நடுவில் உள்ள எண் வருகிறது (3 + 8 = 11; 7 + 4 = 11; 6 + 9 = 15; 7 + 8 = 15) ஆக, வரிசையில் வர வேண்டிய எண் : 5 + 8 = 13; 7 + 6 = 13) |
|
|
|
|
|
|
|