கிரேவி மற்றும் குருமா வகைகள் காளான் கிரேவி காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew) பருப்பு குருமா தக்காளி பொட்டுக்கடலை குருமா கீரை பன்னீர் (saag paneer) காய்கறி குருமா
|
|
|
தேவையான பொருட்கள்
பன்னீர் துண்டங்கள் - 1 கிண்ணம் சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய்த் துண்டங்கள் - 2 கிண்ணம் வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம் தக்காளி (நறுக்கியது) - 1/2 கிண்ணம் தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி சோள மாவு - 1 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி கொத்துமல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி பச்சைமிளகாய் - 5 மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி இஞ்சி (மெல்லிய, நீளமான துண்டுகள்) - 5 பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பச்சைக் கொத்துமல்லி - ஒரு கைப்பிடி |
|
செய்முறை
ஒரு தேக்கரண்டி குளிர்ந்த நீரில் சோள மாவை நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.வாயகன்ற அடி கனமான வாணலியில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய குடைமிளகாய், இஞ்சி துண்டங்களை போட்டு நன்றாக வதக்கி, அதில் எல்லாப் பொடிகளையும் உப்பையும் போட்டுக் கலந்து மேலும் சிறிது நேரம் ஒன்று சேர வேகும்வரை வதக்கவும்.
வெந்த பின்னர் தக்காளித் துண்டங்களைப் போட்டு, தக்காளி சாஸ் விட்டு நன்றாகக் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். சோளமாவுக் கரைசலை யும் அதில் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். பன்னீர் துண்டங்களைப் போட்டு உடைந்து விடாமல் கலக்கி ஒரு கொதி வந்த பின்னர் இறக்கி கொத்துமல்லி இலைகளைத் தூவவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கிரேவி மற்றும் குருமா வகைகள் காளான் கிரேவி காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew) பருப்பு குருமா தக்காளி பொட்டுக்கடலை குருமா கீரை பன்னீர் (saag paneer) காய்கறி குருமா
|
|
|
|
|
|
|