| கடாய் பன்னீர் காளான் கிரேவி
 காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew)
 பருப்பு குருமா
 தக்காளி பொட்டுக்கடலை குருமா
 கீரை பன்னீர் (saag paneer)
 காய்கறி குருமா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  காலி·ப்ளவர் கிரேவி 
 தேவையான பொருட்கள்
 
 நறுக்கிய காலி·ப்ளவர் பூக்கள்	-	2 கிண்ணம்
 கரம் மசாலாத் தூள்	-	1 தேக்கரண்டி
 சீரகத் தூள்	-	1/2  தேக்கரண்டி
 கொத்துமல்லி விதைத் தூள்	-	1/2 தேக்கரண்டி
 பச்சை மிளகாய்	-	5
 மிளகாய்ப் பொடி	-	1/4 தேக்கரண்டி
 இஞ்சி	-	12 சிறு துண்டுகள்
 பூண்டு	-	2 பற்கள்
 முந்திரிப்பருப்பு	-	10
 கிராம்பு	-	2
 ஏலக்காய்	-	1
 பெருஞ்சீரகம்	-	1/2 தேக்கரண்டி
 பொடியாக நறுக்கிய வெங்காயம்	-	1 கிண்ணம்
 தக்காளிக் கூழ்
 (tomato puree)	-	1/2 கிண்ணம்
 தக்காளி சாஸ்
 (tomato sauce)	-	1/2 கிண்ணம்
 கெட்டியான பால்	-	1/4 கிண்ணம்
 பச்சைக் கொத்தமல்லி	-	ஒரு கைப்பிடி அளவு
 ஆலிவ் எண்ணெய்	-	1 மேசைக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 வாயகன்ற அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சற்றுக் காய்ந்ததும் பச்சைமிளகாய், இஞ்சித் துண்டு, பூண்டு, முந்திரிப்பருப்பு, கிராம்பு, ஏலக்காய், பெரும்சீரகம் இவற்றைப் போட்டு வறுத்தபின் கடைசியில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இது ஆறிய பின்னர் எல்லாப் பொடி களையும் இதனுடன் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
 காலி·ப்ளவர் பூக்களை நுண்ணலை அவியனில் (Microwave Oven) வேகவைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் வெந்த காலி ·ப்ளவர் பூக்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இந்த எண்ணெயில் அரைத்த மசாலா விழுதைப் போட்டு நன்றாக வதக்கி இது வெந்ததும் தக்காளிக் கூழையும் சாஸையும் சேர்த்துத் தேவையான அளவு உப்புப் போட்டு நன்றாகக் கலந்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அடுப்பைச் சிறியதாக எரியவிட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்ச மாக விடவும்.
 
 நன்கு கொதித்தபின்னர் இந்த கலவை சற்று கெட்டியாகிவிடும். இப்போது பொன்னிறமாக வறுத்த காலிப்ளவர் பூக்களைப் போட்டு கலந்து ஒரு சில நிமிடங்கள் கொதித்தபின்னர் அடுப்பிலிருந்து
 இறக்கிக் கொத்தமல்லி தூவவும். அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் ·ப்ரெஷ் க்ரீம் கொஞ்சம் கலந்தால் செழுமையாக (rich) இருக்கும். ஆனால் இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடாய் பன்னீர்
 காளான் கிரேவி
 காய்கறி ஸ்ட்யூ - (Vegetable Stew)
 பருப்பு குருமா
 தக்காளி பொட்டுக்கடலை குருமா
 கீரை பன்னீர் (saag paneer)
 காய்கறி குருமா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |