|
|
|
1. ராஜா ஒரு ஏழை விவசாயி. அவன் முதல் நாள் திங்கட்கிழமை வேலைக்குச் சென்றபோது குறைந்த அளவே கூலி கிடைத்தது. மறுநாள் வேலைக்குச் சென்றபோது முதல் நாளை விட நாற்பது ரூபாய் அதிகம் கிடைத்தது. புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை கிடைத்தைவிட நாற்பது ரூபாய் அதிகம் கிடைத்தது. வியாழக்கிழமை அன்று புதன்கிழமையில் கிடைத்ததைவிட நாற்பது ரூபாய் அதிகம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றபோது வியாழக்கிழமை கிடைத்ததை விட அதிகமாக ரூபாய் நாற்பது கிடைத்தது. சனிக்கிழமை அவன் வேலைக்குச் செல்லாமல் மொத்த தொகையையும் எண்ணிப் பார்த்தபோது ஆயிரம் ரூபாய் இருந்தது. அப்படியானால் அவன் திங்கள் முதல் வெள்ளிவரை ஒவ்வொருநாளும் எவ்வளவு கூலி பெற்றிருப்பான்?
2. மகேஷ், சுரேஷ், ரமேஷ் மூவரும் சந்தைக்குச் சென்றனர். மகேஷிடம் 100 மாம்பழங்கள் இருந்தன. சுரேஷிவிடம் 80 மாம்பழங்கள் இருந்தன. ரமேஷிடம் 40 மாம்பழங்கள் மட்டுமே இருந்தன. மாம்பழங்களை ஒருவர் விற்ற விலைக்கே மற்ற இருவரும் விற்றனர். அனைத்தையும் விற்ற பிறகு ஒவ்வொருவரிடமும் ரூ. 200/ தொகை இருந்தது. அவர்கள் எந்த விலைக்குப் பழங்களை விற்றிருப்பர்?
3. 0,1,1,2,3,5,8,13,.... வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?
4. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 45. ஒன்றிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் 9 விடையாக வருகிறது. ஒன்றோடு மற்றொன்றைப் பெருக்கினால் 486 வருகிறது. அந்த எண்கள் யாவை?
5. சங்கரின் வயது 48. அவனது தந்தை பாலுவின் வயது 72. எத்தனை வருடங்களுக்கு முன்னால் பாலுவின் வயது, தன் மகன் சங்கரின் வயதைப் போல மூன்று மடங்காக இருந்திருக்கும்?
அரவிந்த் |
|
விடைகள் 1) திங்கட்கிழமை கூலி = x செவ்வாய்கிழமை = x + 40 புதன்கிழமை = (x + 40) + 40 வியாழக்கிழமை = (x + 40) + 40 + 40 வெள்ளிக்கிழமை = (x + 40) + 40 + 40 + 40 மொத்த கூலித் தொகை = 1000 x + (x + 40) + x + 40 + 40 + (x + 40) + 40 + 40 + (x + 40) + 40 + 40 + 40 = 1000 = 5 x + 400 = 1000 5 x = 1000 - 400 = 600 x = 600 / 5 = 120
திங்கட்கிழமை பெற்ற கூலி = ரூ. 120. செவ்வாய்க்கிழமை = ரூ. 160 (x + 40) புதன்கிழமை = ரூ. 200. (x + 40) + 40 வியாழக்கிழமை = ரூ. 240. (x + 40) + 40 + 40 வெள்ளிக்கிழமை = ரூ. 280. (x + 40) + 40 + 40 + 40
2) மகேஷிடம் இருந்த பழங்கள் = 100 சுரேஷிடம் இருந்தது = 80 ரமேஷிடம் = 40
மகேஷ் 7 பழங்கள் 10 ரூபாய்க்கு என்று விற்றான். அதன்படி அவனிடம் இருந்த 100 பழங்களில் 98ஐ 140ரூபாய்க்கு விற்றான். மீதம் 2 பழம் இருந்தது.
சுரேஷும் 7 பழங்கள் 10 ரூபாய்க்கு என்று விற்றான். அதன்படி அவனிடம் இருந்த 80 பழங்களில் 77ஐ, 110 ரூபாய்க்கு விற்றான். மீதம் அவனிடம் 3 பழங்கள் இருந்தன.
ரமேஷூம் 7 பழங்கள் 10 ரூபாய்க்கு என்று விற்றான். அதன்படி அவனிடம் இருந்த 40 பழங்களில் 35ஐ, 50 ரூபாய்க்கு விற்றான். மீதம் அவனிடம் 5 பழங்கள் இருந்தன.
மகேஷ் தன்னிடம் மீதம் இருந்த இரண்டு பழத்தை, ஒரு பழம் 30 ரூ. வீதம் விற்றான். அதன்படி அவனது தொகை 140 + 60 (2 x 30) = 200 ஆகியது.
சுரேஷூம் மீதம் இருந்த மூன்று பழங்களை ஒன்று 30 ரூ. வீதம் விற்றான். அதன்படி அவனிடமும் இருந்த தொகையும் 110 + 90 (3 x 30) = 200 ஆனது.
ரமேஷூம் மீதம் இருந்த ஐந்து பழங்களை ஒன்று 30 ரூ. வீதம் விற்றான். அதன்படி அவனிடமும் இருந்த தொகையும் 50 + 150 (5 x 30) = 200 ஆனது.
3) வரிசையில் அடுத்து வரும் எண் 21. முதல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையே அடுத்த எண்ணாக வருமாறு வரிசை அமைந்துள்ளது. 0 + 1 = 1; 1 + 2 = 3; 2 + 3 = 5 ....... இந்த வரிசையின் படி அடுத்து வர வேண்டிய எண் 13 + 8 = 21
4) A + B = 45 A - B = 9 -------------- 2A = 36 ------------- A = 18
ஃ B = 45 - A = 45 - 18 = 27
AB = 18 x 27 = 486
5) சங்கரின் தற்போதைய வயது = 48 = x
பாலுவின் தற்போதைய வயது = 72 = y
N வருடங்களுக்கு முன்னால் = 3x - y --------------- 2 3 x 48 - 72 = ------------------- = 36 2
36 வருடங்களுக்கு முன்னால் பாலுவின் வயது = 72 - 36 = 36 36 வருடங்களுக்கு முன்னால் சங்கரின் வயது = 48 - 36 = 12
மும்மடங்கு = 12 x 3 = 36 |
|
|
|
|
|
|
|