புறம்போக்கு அஞ்சான் பூனை துணை முதல்வர் 49 ஓ மாலுமி என்றுமே ஆனந்தம்
|
|
|
|
குடும்பப் பாங்கான படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் வி.சேகர். இவர் மகன் கார்ல் மார்க்ஸ் நாயகனாக அறிமுகமாகும் படம் சரவணபொய்கை. நாயகியாக அருந்ததி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். பெரும்பகுதி தியேட்டரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பற்றி வி.சேகர், "பெரும்பாலும் நான் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்பப் பாங்காக இருக்கும். சமூகத்துக்கு மட்டுமில்லாமல் குடும்பத்துக்கும் செய்தி சொன்னவை அவை. இது நான் இயக்கும் முதல் காதல் படம். என் 18வது படம் இது. வழக்கம்போல நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். கார்ல் மார்க்சும், கருணாசும் நண்பர்கள். தியேட்டரில் வேலை செய்கிறவர்கள். கார்ல் மார்க்ஸ் டிக்கெட் கொடுப்பவர். கருணாஸ் டிக்கெட் கிழிப்பவர். அங்கு அடிக்கடி படம் பார்க்க வரும் அருந்ததி மீது கார்ல் மார்க்சுக்கு காதல் வரும். அருந்தயின் அக்கா மீது கருணாசுக்கு காதல். அந்தக் காலத்தில் கிராமங்களில் காதல் உருவாகும் களமாக இருந்ததில் தியேட்டருக்கு பெரிய பங்கு உண்டு. அதையே காமெடியாக சொல்லியிருக்கிறேன்" என்கிறார். |
|
அரவிந்த் |
|
|
More
புறம்போக்கு அஞ்சான் பூனை துணை முதல்வர் 49 ஓ மாலுமி என்றுமே ஆனந்தம்
|
|
|
|
|
|
|