Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்
நூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மான்கராத்தே
என் உயிர் என் கையில்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.
மீகாமன்
நேர் எதிர்
வேளச்சேரி
பொங்கல் படங்கள்
- அரவிந்த்|ஜனவரி 2014|
Share:
பொங்கலுக்கு அஜீத் நடிக்கும் 'வீரம்', விஜய் நடிக்கும் 'ஜில்லா' இரண்டும் வெளியாகின்றன. வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் ரேஸில் இருக்கிறது. தியேட்டர் கிடைப்பதைப் பொறுத்து சில சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகக் கூடும். பொங்கலன்று வெளியாகத் திட்டமிட்டிருந்த ரஜினியின் 'கோச்சடையான்' தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாகக்கூடும் என்கிறார் கோலிவுட் குருவியார்.



ஜில்லா
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் இப்படத்தை நேசன் இயக்கியிருக்கிறார். டி. இமான் இசையமைத்திருக்கிறார். ஆர்.பி. சௌத்ரி நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த அதிரடிப் படம் இது.
வீரம்
அஜீத், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா நடிக்கும் படம் வீரம். நகைச்சுவை+ஆக்‌ஷபடமான இதில் கிராமத்து இளைஞராக அஜீத் நடித்திருக்கிறார். 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா இதையும் இயக்கியிருக்கிறார். இசை: தேவிஸ்ரீ பிரசாத்.

ஜெகஜால புஜபல தெனாலிராமன்
கிருஷ்ணதேவராயர் மற்றும் விகடகவி தெனாலிராமன் என இரு வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இரண்டிற்கும் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஹோம் வொர்க் செய்து நடித்திருக்கிறாராம். கதாநாயகி மீனாட்சி தீட்சித். பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: டி. இமான். இயக்கம்: யுவராஜ் தயாளன்.

அரவிந்த்
More

மான்கராத்தே
என் உயிர் என் கையில்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.
மீகாமன்
நேர் எதிர்
வேளச்சேரி
Share: 




© Copyright 2020 Tamilonline