|
அக்டோபர் 2006: குறுக்கெழுத்துப்புதிர் |
|
- |அக்டோபர் 2006| |
|
|
|
குறுக்காக: 3. வில்லன் முதுகில் காணலாம் (3) 5. ஒருத்தி பணத்தில் இருப்பவர் அறிவுடையவள் (5) 6. ஜோதிடம் சொல்லும் நோக்கம் (2) 7. விலகு, விளக்கு (3) 8. தொண்டையணி? (5) 11. ஊன்றுகோல் முனை உடைய புலி தின்னாததில் அமிழ்வது உடல்நலனுக்குக் கேடு (5) 12. குயில் குணத்தாள் பாதத் துளியில் புரண்டு கிட (3) 14. காலடியில் இருக்கும் மலர் பெரியது (2) 16. ஒரு செய்யுள் ஒரு கொடி சிறையையுடைத்து கூப்பாடு (5) 17. மெலிந்திருக்கும் ஏழைகளின் எரிபொருள் (3)
நெடுக்காக 1. கற்பனையில் மிதப்போரின் கோட்டைத் தலத்தில் நதியோ? (3, 3) 2. தலம் சென்றால் கடைசியாகத் தேர்வில் எழுத வேண்டியிருக்கும் (3) 3. ரதி மயங்க விட்டுவிட்டு அக்காவும் பதவியால் பெறுவது (5) 4. உள்ளே போ புண்ணாக்கு, உள்ளேயிருப்பதை எறிந்து விடு (2) 9. சுற்றுவழி, நீண்டால் உலகம் அப்படித்தான் போகும் (6) 10. வலி கொடுக்க காற்று உதவி புரி (5) 13. கடைக்கடையாய்த் தாவி, கட்சி மாறி வந்த ரசிகன் (3) 15. சின்னம்மா சுமந்திருப்பது குற்றம் (2)
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com |
|
நீங்கள் புதிர் மன்னரா? குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை அக்டோபர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@ chennaionline.com. அக்டோபர் 25க்குப் பிறகு, விடைகளை http://thendral. chennaionline.com என்ற சுட்டியில் காணலாம்.
செப்டம்பர் 2006 புதிர்மன்னர்கள்
1. பகலவன் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே 2. குமார் ராமசுப்ரமணியன், நியூ ஜெர்ஸி 3. வி. சந்திரசேகரன், சன்னிவேல்
புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
செப்டம்பர் 2006 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 5. அடைக்கலம், 6. வலி, 7. பாதாளம், 9. திருமால், 10. ஆரம்பி, 12. கடம்பா, 13. ஆய, 14. வானகத்தோர்
நெடுக்காக: 1. வாடை, 2. வாகனம், 3. சம்பாதி, 4. ஆவணி மாதம், 10. தாவரவியல், 11. பிறவாத, 12. கலைகள், 15. தோள் |
|
|
|
|
|
|
|