முளைப்பயறில் மூணு தினுசு முளைப்பயறு சப்ஜி
|
|
|
|
தேவையான பொருட்கள் முளைப்பயறு - 2 கிண்ணம் பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம். மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கிராம்பு - 6 பச்சைமிளகாய் - 4 உப்பு - 1 தேக்கரண்டி நெய் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி தண்ணீர் -- 2 கிண்ணம்.
செய்முறை : அரிசியைச் சுத்தம் செய்து, தண்ணீரை வடிய வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டுச் சூடாக்கவும். பின்னர், அதில் மஞ்சள்பொடி, ஏலப்பொடி, சீரகம், கிராம்பு போடவும். சூடான பிறகு, பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் வடிகட்டிய அரிசி சேர்த்துப் பிரட்டவும். அரிசியில் ஈரம் போனதும், முளைப்பயறு சேர்த்து 2 நிமிடம் வதக்கியபின், அடுப்பைஅணைக்கவும்.
ரைஸ் குக்கரில் 2 கிண்ணம் தண்ணீருடன் உப்பு சேர்த்து ஆன் செய்யவும். தண்ணீர் லேசாகச் சுட்டவுடன், அரிசி, பயறு கலவையைச் சேர்க்கவும். புலாவ் தயாரானபின், எலுமிச்சைச் சாற்றை அதில் விட்டு கலக்கவும். முளைப்பயறு புலாவ் தயார். |
|
லதா சந்திரமௌளி, காலேஜ்வில், பென்சில்வேனியா |
|
|
More
முளைப்பயறில் மூணு தினுசு முளைப்பயறு சப்ஜி
|
|
|
|
|
|
|