|
|
1. வரிசையில் விடுபட்ட எண் எது? 37, 10, 82; 29, 11, 47; 96, ?, 87.
2. ராமுவின் பெட்டியில் சில கேக்குகள் இருந்தன. அவன் அவற்றை நண்பனின் பிறந்த நாளுக்குப் பரிசாக அளிக்க எண்ணினான். அவன் போகும் வழியில் இருந்த சுங்கச்சாவடியில் அவன் பெட்டியில் இருந்த கேக்குகளில் பாதியைச் செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் எடுத்துக் கொண்டபின் ஒன்றைத் திரும்ப அளித்தனர். இவ்வாறு அவன் ஐந்து சுங்கச் சாவடிகளையும் கடந்து தன் நண்பன் வீட்டை அடைந்தான். பெட்டியில் இருந்த இரண்டு கேக்குகளை நண்பனுக்குப் பரிசாக அளித்தான். அப்படியானால் அவனிடம் தொடக்கத்தில் இருந்த கேக்குகள் எத்தனை?
3. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண்கள் எவை? 7, 14, 17, 21, 27, 28, 35, 37, ?, ?
4. இரண்டு சிறுவர்கள் ஆற்றைக் கடக்க விரும்பினர். ஆனால் அங்கு ஒரே ஒரு படகு மட்டுமே இருந்தது. அந்தப் படகில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். ஒருமுறை சென்றால் அந்தப் படகைத் திரும்பக் கொண்டு வரக் கயிறோ, படகோட்டியோ, பிற சாதனங்களோ இல்லை. ஆனாலும் அந்தச் சிறுவர்கள் படகின் மூலம் ஆற்றைக் கடந்துவிட்டனர், எப்படி?
5. 18, 12, 2, 3 - இந்த எண்களைப் பயன்படுத்தி கழித்தோ, கூட்டியோ, பெருக்கியோ, வகுத்தோ விடை 111 வருமாறுச் செய்ய வேண்டும். இயலுமா?
அரவிந்த் |
|
விடைகள் 1. வரிசையில் முதல் மற்றும் இறுதி எண்களின் கூட்டுத்தொகையே இறுதி எண்ணாக உள்ளது (3 + 7 = 10; 8 + 2 = 10, 2 + 9 = 11; 4 + 7 = 11) ஆகவே அடுத்து வர வேண்டியது 9 + 6 = 15; 8 + 7 = 15.
வரிசையில் விடுபட்ட எண் = 15
2. ராமு கொண்டுவந்தது இரண்டு கேக்குகள்தாம். முதல் சுங்கச் சாவடியில் அவன் பெட்டியில் இருந்ததில் பாதியை, அதாவது இரண்டில் பாதியான ஒரு கேக்கை அளித்தான். அவர்களிடமிருந்து மீண்டும் அந்த ஒன்றைப் பெற்றுக் கொண்டான். இரண்டாவது சுங்கச் சாவடியிலும் இவ்வாறே இரண்டில் பாதியான ஒரு கேக்கை அளித்து, மீண்டும் அந்த ஒன்றைப் பெற்றுக் கொண்டான். இவ்வாறே அவன் ஐந்து சாவடிகளையும் கடந்து இரண்டு கேக்குகளைத் தனது நண்பனுக்குப் பரிசாக அளித்தான்.
3. வரிசை ஏழால் வகுபடும் எண்களைக் கொண்டதாகவும், எண் ஏழை இறுதியில் கொண்டதாகவும் உள்ளது. ஆகவே அடுத்து வர வேண்டிய எண்கள் : 42, 47
4. சிறுவர்கள் இருவரும் எதிரெதிர்க் கரையில் இருந்தனர். அதனால் ஒருவர் இக்கரை வந்ததும் மற்றவர் அந்தப் படகில் ஏறி அக்கரைக்குப் போய்விட்டார்.
5. (18 x 12) / 2 + 3 = 111 |
|
|
|
|
|
|
|