கணிதப்புதிர்கள்
1. வரிசையில் விடுபட்ட எண் எது? 37, 10, 82; 29, 11, 47; 96, ?, 87.

2. ராமுவின் பெட்டியில் சில கேக்குகள் இருந்தன. அவன் அவற்றை நண்பனின் பிறந்த நாளுக்குப் பரிசாக அளிக்க எண்ணினான். அவன் போகும் வழியில் இருந்த சுங்கச்சாவடியில் அவன் பெட்டியில் இருந்த கேக்குகளில் பாதியைச் செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் எடுத்துக் கொண்டபின் ஒன்றைத் திரும்ப அளித்தனர். இவ்வாறு அவன் ஐந்து சுங்கச் சாவடிகளையும் கடந்து தன் நண்பன் வீட்டை அடைந்தான். பெட்டியில் இருந்த இரண்டு கேக்குகளை நண்பனுக்குப் பரிசாக அளித்தான். அப்படியானால் அவனிடம் தொடக்கத்தில் இருந்த கேக்குகள் எத்தனை?

3. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண்கள் எவை? 7, 14, 17, 21, 27, 28, 35, 37, ?, ?

4. இரண்டு சிறுவர்கள் ஆற்றைக் கடக்க விரும்பினர். ஆனால் அங்கு ஒரே ஒரு படகு மட்டுமே இருந்தது. அந்தப் படகில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். ஒருமுறை சென்றால் அந்தப் படகைத் திரும்பக் கொண்டு வரக் கயிறோ, படகோட்டியோ, பிற சாதனங்களோ இல்லை. ஆனாலும் அந்தச் சிறுவர்கள் படகின் மூலம் ஆற்றைக் கடந்துவிட்டனர், எப்படி?

5. 18, 12, 2, 3 - இந்த எண்களைப் பயன்படுத்தி கழித்தோ, கூட்டியோ, பெருக்கியோ, வகுத்தோ விடை 111 வருமாறுச் செய்ய வேண்டும். இயலுமா?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com